உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / டிரம்ப் அறிவிப்பால் சரிந்த சந்தை

டிரம்ப் அறிவிப்பால் சரிந்த சந்தை

• வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்று, பங்குச் சந்தை குறியீடுகள் இறக்கத்துடன் நிறைவடைந்தன • அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், வரி விதிப்பு தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பின் எதிரொலியாக, இந்திய சந்தையில் வர்த்தகம் ஆரம்பித்த போதே சரிவுடன் துவங்கியது. தொடர்ந்து, அன்னிய முதலீடுகள் வெளியேற்றம், மந்தமான மூன்றாம் காலாண்டு முடிவுகள் காரணமாக, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்றனர் • பிற்பகல் வரை அதிக ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்ட நிலையில், அதன் பிறகான வர்த்தகத்தின் போது, மளமளவென சந்தை குறியீடுகள் சரிந்தன. வர்த்தகத்தின் இடையே நிப்டி, சென்செக்ஸ் தலா 1.50 சதவீதத்துக்கு மேல் சரிவை கண்டன • நிப்டி குறியீட்டில் இடம்பெற்றுள்ள 12 துறைகளில், அனைத்து துறை பங்குகளும் இறக்கம் கண்டன. அதிகபட்சமாக ரியல் எஸ்டேட் நிறுவன குறியீடு 4 சதவீதமும்; வாகனத்துறை குறியீடு 1.60 சதவீதமும்; பொதுத்துறை வங்கி குறியீடு 1.50 சதவீதமும் இறக்கம் கண்டன• நேற்றைய இறக்கத்தால், ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு சந்தை குறியீடுகள் சரிவை கண்டன. முதலீட்டாளர்கள் கிட்டத்தட்ட 8.70 லட்சம் கோடி ரூபாயை இழந்தனர்.

அன்னிய முதலீடு

அன்னிய முதலீட்டாளர்கள், 5,920 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்றனர்.

கச்சா எண்ணெய்

உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.76 சதவீதம் குறைந்து, 79.54 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 பைசா குறைந்து, 86.58 ரூபாயாக இருந்தது.டாப் 5 நிப்டி 50 பங்குகள்அதிக ஏற்றம் கண்டவை அப்பல்லோ ஹாஸ்பிட்டல்  டாடா கன்ஸ்யூமர் பி.பி.சி.எல்., ஸ்ரீராம் பைனான்ஸ் ஜே.எஸ்.டபுள்யு.,ஸ்டீல் அதிக இறக்கம் கண்டவை டிரென்ட் என்.டி.பி.சி., அதானி போர்ட்ஸ் ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க் அதானி என்டர்பிரைசஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி