மேலும் செய்திகள்
கருப்பு திங்கள்: கலங்கடித்த பங்கு சந்தை
08-Apr-2025
மும்பை:நேற்று முன்தினம் பங்கு சந்தைகள் அதளபாதாளத்துக்கு பாய்ந்த நிலையில், ஆறுதல் தரும் விதமாக, கணிசமான அளவு உயர்ந்தன.திங்களன்று சந்தை குறியீடுகள் 4 சதவீதத்துக்கு மேல் சரிவு கண்ட நிலையில், நேற்று கிட்டத்தட்ட 2 சதவீதம் உயர்வுடன் முடிவடைந்தன. நேற்றைய வர்த்தக நேர முடிவில், நிப்டி 374 புள்ளிகளும், சென்செக்ஸ் 1,089 புள்ளிகளும் உயர்ந்து, நிறைவடைந்தன. நேற்றைய உயர்வால் முதலீட்டாளர்கள் 7.32 லட்சம் கோடி ரூபாய் லாபமாக ஈட்டினர். சந்தை உயர்வுக்கான காரணங்கள்:1உலக சந்தைகள் மீட்சி
அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பை பேச்சு மூலம் குறைக்க பல நாடுகள் கொண்டுள்ள நம்பிக்கை காரணமாக, ஆசிய சந்தைகள் மீட்சி கண்டன. ஜப்பானுடன் பேச்சு நடத்த அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் முன்வந்ததை அடுத்து, ஜப்பானின் நிக்கி 5.6 சதவீதம் அளவுக்கு எழுச்சி கண்டது. ஹாங்காங் சந்தை 1.70 சதவீதமும்; சீனாவின் ப்ளூசிப் குறியீடு 0.6 சதவீதமும் உயர்வு கண்டன.2பணக்கொள்கை கூட்டம்
ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை கூட்டத்தின் முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. இதில், ரெப்போ வட்டி விகிதம் கால் சதவீதம் குறைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் நிலவும் வர்த்தக பதற்றத்துக்கு மத்தியில், ரெப்போ வட்டி குறைக்கப்படுவது, வளர்ச்சிக்கு உதவும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
3விலை மலிவான பங்கு
சமீபத்திய சரிவுகளால், நிப்டி குறியீடு உச்சத்தில் இருந்து 14.8 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டுள்ளது. இதேபோல், மிட்கேப் குறியீடு 19 சதவீதமும்; ஸ்மால்கேப் குறியீடு 22 சதவீதமும் சரிவை கண்டுள்ளன. இதனால், விலை குறைந்திருந்த பங்குகளை முதலீட்டாளர்கள் போட்டி போட்டு வாங்கினர்.4எண்ணெய் விலை சரிவு
அமெரிக்க வரி விதிப்பின் தாக்கத்தால் தேவை குறைந்து, உலகளாவிய பொருளாதார மந்தநிலை அச்சம் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 65 டாலருக்கு கீழே சென்றது. இந்த விலை சரிவு, இந்திய சந்தைக்கு சாதகமான அம்சமாக கருதப்படுகிறது.
5அமெரிக்க பத்திர மதிப்பு
பத்து ஆண்டுகளில் முதிர்வடையும் அமெரிக்க பத்திரங்களின் வட்டி 4.50 சதவீதத்தில் இருந்து, 4.14 சதவீதமாகவும்; 2 ஆண்டுகள் முதிர்வடையும் பத்திரங்களின் வட்டி 4.28 சதவீதத்தில் இருந்து 3.71 சதவீதமாகவும் குறைந்துள்ளது.அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் அமெரிக்க பத்திரங்களின் வட்டி குறைவு ஆகியவை, இந்திய பங்குகளை நோக்கி அன்னிய முதலீட்டாளர்களை படையெடுக்க வைக்கும் என்பதால், சந்தை உயர்வுடன் வர்த்தகமானது.
நிப்டிமுந்தைய முடிவு: 22,161.60நேற்றைய முடிவு: 22,535.85மாற்றம்: 374.25 ஏற்றம் பச்சைசென்செக்ஸ்முந்தைய முடிவு: 73,137.90நேற்றைய முடிவு: 74,227.08மாற்றம்: 1089.18 ஏற்றம் பச்சைஅன்னிய முதலீடு:
அன்னிய முதலீட்டாளர்கள் ____ கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்று இருந்தனர். கச்சா எண்ணெய்:
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.22 சதவீதம் அதிகரித்து, 64.35 அமெரிக்க டாலராக இருந்தது.ரூபாய் மதிப்பு:
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 50 பைசா குறைந்து, 86.26 ரூபாயாக இருந்தது.
08-Apr-2025