சிறு சேமிப்புக்கு வட்டி மாற்றமில்லை
புதுடில்லி: நடப்பு அக்டோபர் - டிசம்பர் காலாண்டில், சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் மாற்றமின்றி தொடரும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் காலாண்டில் மாற்றியமைக்கப்பட்ட வட்டி விகிதங்கள், அதன் பிறகு தொடர்ந்து மூன்று காலாண்டுகளாக மாற்றமின்றியே தொடர்கிறது.
சேமிப்பு திட்டம் வட்டி விகிதம் (%)
* தபால் அலுவலகம்சேமிப்பு கணக்கு 4.00ரெக்கரிங் டிபாசிட் 6.70ஓர் ஆண்டு டிபாசிட் 6.90இரண்டு ஆண்டு டிபாசிட் 7.00மூன்று ஆண்டு டிபாசிட் 7.10* பொது வைப்பு நிதி 7.10மாதாந்திர வருமானத் திட்டம் 7.40ஐந்து ஆண்டு டிபாசிட் 7.50* கிசான் விகாஸ் பத்திரம் 7.50* தேசிய சேமிப்பு சான்றிதழ் 7.70* சுகன்ய சம்ரிதி யோஜனா 8.20* மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் 8.20