உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / டீலர் வாகனங்களை நிறுத்த சென்னை அருகில் தனி பூங்கா சிப்காட் வாயிலாக அமைக்க திட்டம்

டீலர் வாகனங்களை நிறுத்த சென்னை அருகில் தனி பூங்கா சிப்காட் வாயிலாக அமைக்க திட்டம்

சென்னை: தமிழகத்தில் கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை விற்கும் டீலர்கள் பயன் பெறும் வகையில், சென்னை அருகில், 100 ஏக்கரில் தனி தொழில் பூங்காவை அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக இடம் அடையாளம் காணும் பணியில் அதிகாரி கள் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கார், பைக், ஆட்டோ, ஸ்கூட்டர், வர்த்தக வாகனம் என, அனைத்து வகை வாகனங்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. டி.வி.எஸ்., டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய், யமஹா, பஜாஜ், ஹீரோ மோட்டார் கார்ப் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள், வாகனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. அந்நிறுவனங்களிடம் இருந்து வாகனங்களை டீலர்கள் வாங்கி, வாடிக்கையாளர்களிடம் விற்கின்றனர். வாகன உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து வாங்கும் வாகனங்களை பல டீலர்கள், புறநகர் பகுதிகளில் உள்ள தனியாருக்கு சொந்தமான காலியிடங்களில் நிறுத்தி வைக்கின்றனர். இதனால், வாடகைக்கு அதிகம் செலவிடுகின்றனர். எனவே, சென்னை அருகில், 100 ஏக்கரில் வாகனங்களை நிறுத்துவதற்கான தனி தொழில் பூங்காவை, 'சிப்காட்' வாயிலாக அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துஉள்ளது. இதற்காக, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடம் தேடும் பணி நடக்கிறது.

செலவு குறையும்

இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஒரே இடத்தில், வாகன தொழிற்சாலைகளில் இருந்து வரும் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தலாம். அங்கிருந்து, ஷோ ரூம்களுக்கு வாகனங்களை எடுத்துச் செல்லலாம். இதனால், கிடங்கு வாடகை, போக்குவரத்து செலவு ஆகியவை குறையும். வாகன டீலர்கள், வாகன உற்பத்தி நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி, இத்திட்டம் செயல்படுத்தப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை