உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / கடல் உணவு ஏற்றுமதியை அதிகரிக்க பிரதமர் ஆலோசனை

கடல் உணவு ஏற்றுமதியை அதிகரிக்க பிரதமர் ஆலோசனை

புதுடில்லி:மீன்வளத் துறையின் செயல்பாடுகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும், பிரதமர் நரேந்திர மோடி நேற்று முக்கிய ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில், மீன்வளத் துறையை மேம்படுத்துவது குறித்தும், கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி, ஆழ்கடல் மீன்பிடிப்பை அதிகரிப்பது குறித்தும் அதிகாரிகளிடம் அவர் வலியுறுத்தினார்.இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் மத்திய மீன்வளத் துறை அமைச்சகம், நாட்டின் ஏழு கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 255.30 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அறிமுகப்படுத்தியது. மீன்பிடி தொழில் ஊரகப் பகுதி மக்களுக்கு முக்கிய வாழ்வாதாரமாக விளங்குவதோடு, இந்திய பொருளாதாரத்துக்கும் குறிப்பிடத்தக்க பங்களிக்கிறது.

2023 - 24 வரையிலான நான்கு நிதியாண்டுகளில் மீன்வளத் துறையின் ஏற்றுமதி

நிதியாண்டு ஏற்றுமதி (லட்சம் மெட்ரிக் டன்) மதிப்பு (ரூ.கோடியில்) முக்கிய சந்தைகள் முக்கிய பொருட்கள்2020 - 21 11.50 43,717 அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான் உறைந்த இறால், உறைந்த மீன்2021 - 22 13.70 57,586 அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய யூனியன் உறைந்த இறால், உறைந்த மீன், மெல்லுடலிகள்2022 - 23 17.30 63,969 அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான் உறைந்த இறால், உறைந்த மீன்2023 - 24 178.00 61,000 அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய யூனியன் உறைந்த இறால், உறைந்த மீன், அலங்கார மீன்* கடந்த நிதியாண்டில் ஏற்றுமதிகள் கிட்டத்தட்ட 1.20 லட்சம் கோடி ரூபாயை எட்டியிருக்கும் என கணிக்கப்படுகிறது

* உலகின் மொத்த மீன் உற்பத்தியில் 8 சதவீத பங்குடன், இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

* இந்திய மீன்பிடி தொழிலின் மொத்த அளவு 53.10 லட்சம் டன் என மதிப்பிடப்பட்டுள்ளது. *நாட்டில் மொத்தம் 3,477 கடற்கரை மீன்பிடி கிராமங்கள் உள்ளன. * கிட்டத்தட்ட 30 முதல் 40 சதவீதத்துடன், அமெரிக்கா அதிகபட்ச பங்கு வகிக்கிறது.

ஆழ்கடல் மீன்பிடிப்பில் சமீபத்திய முன்னேற்றங்கள்

* தேசிய மீன்வளக் கொள்கை 2020, ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. டூனா, மைச்டோபிட்ஸ் போன்ற அரிய வகை மீன்களை பிடிக்க ஊக்குவிக்கிறது. * கடந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகளில் உள்ள பிரத்தியேக பொருளாதார மண்டலங்களில் நிலையான மீன்பிடிப்புக்கான கட்டமைப்பு அறிவிக்கப்பட்டது. * பிரதமரின் மத்சய சம்பதா யோஜனா மற்றும் நீல புரட்சி திட்டத்தின் வாயிலாக, படகு நவீனமயமாக்கல், குளிர்பதன கிடங்கு மற்றும் பயிற்சி ஆகியவை வழங்கப்படுகிறது. * அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படவுள்ள சமுத்திரயான் திட்டத்தின் வாயிலாக, 6,000 மீட்டர் ஆழம் வரை ஆழ்கடல் வளங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளது. புதிய மீன்பிடி இடங்களை அடையாளம் காணுவதே இதன் நோக்கமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ