உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / வட்டியை குறைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஆர்.பி.ஐ., ரெப்போ வட்டி 0.50% குறைப்பு ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஆர்.பி.ஐ., வீடு, வாகன, தனிநபர் கடன் வட்டி குறையும்

வட்டியை குறைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஆர்.பி.ஐ., ரெப்போ வட்டி 0.50% குறைப்பு ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஆர்.பி.ஐ., வீடு, வாகன, தனிநபர் கடன் வட்டி குறையும்

மும்பை:ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை, அரை சதவீதம் குறைத்துள்ளது. இதையடுத்து, ரெப்போ வட்டி விகிதம் 5.50 சதவீதமாக குறைந்துள்ளது. மும்பையில் கடந்த 4ம் தேதி துவங்கி நடைபெற்று வந்த ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. கால் சதவீதம் அளவுக்கு வட்டி குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆச்சரியப்படத்தக்க வகையில் அரை சதவீதம் வட்டி குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆகஸ்ட் மாதத்துக்கு பின், இதுவே மிகக் குறைந்த வட்டி விகிதம். இதையடுத்து, வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான இ.எம்.ஐ., எனும் மாதாந்திர தவணை மேலும் குறையக்கூடும்.

டிபாசிட் பயன் தருமா?

ரெப்போ வட்டி குறைப்பால் டிபாசிட்களுக்கான வட்டி விகிதம் மேலும் குறையும். ஏற்கனவே ரெப்போ வட்டி குறைக்கப்பட்டதை ஈடுசெய்ய, வங்கிகள் கடந்த பிப்ரவரி மாதம் முதல், 0.30 முதல் 0.70 சதவீதம் வரை, வட்டி விகிதத்தை குறைத்துள்ளன. அடுத்த மார்ச் மாதத்துக்குள் டிபாசிட்களுக்கான வட்டி விகிதம் 1 சதவீதம் குறைக்கப்படும் என, எஸ்.பி.ஐ., ரிசர்ச் தெரிவித்துள்ளது. வங்கிகள் வட்டி குறைப்பை நடைமுறைப்படுத்த இன்னும் சில வாரங்கள் ஆகும் என்பதால், உடனடியாக டிபாசிட் போடுவது நல்லது.

முக்கிய அம்சங்கள்

 ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதத்திலிருந்து 5.50 சதவீதமாக குறைப்பு நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி 6.50 சதவீதமாக இருக்கும் என கணிப்பு நடப்பு நிதியாண்டுக்கான பணவீக்க கணிப்பு முன்பிருந்த 4 சதவீதத்திலிருந்து 3.70 சதவீதமாக குறைப்பு வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதம் 4 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக குறைப்பு

பணவீக்கம்

பணவீக்கத்துக்கு எதிரான போரை ரிசர்வ் வங்கி வென்றுள்ளது என்றே கூறலாம். பணவீக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், வரும் காலங்களில் உணவுப் பொருட்கள் விலை மேலும் குறையக்கூடும். தங்கம், கச்சா எண்ணெய் விலையும் குறைய வாய்ப்புள்ளது. எனினும், பருவமழை அளவு, அமெரிக்க வரி விதிப்பின் தாக்கம் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

ரொக்க இருப்பு

ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் பராமரிக்க வேண்டிய ரொக்க இருப்பு விகிதம் 4 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதனால், வங்கிகளிடம் 2.50 லட்சம் கோடி ரூபாய் இருப்பு அதிகரிக்கும்.

தாராள கடன்

ஒருபுறம் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. மற்றொரு புறம் வங்கிகளின் ரொக்க இருப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வங்கிகளால் தாராளமாக கடன் வழங்க முடியும்.

வாய்ப்பு குறைவு

கடந்த பிப்ரவரி மாதம் முதல் ரெப்போ வட்டி விகிதம், 1 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. எனினும், இதற்கு மேல் ரெப்போ வட்டி விகிதத்தை குறைப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவே.

கிரிப்டோ

கிரிப்டோ கரன்சியை பொறுத்தவரை, ரிசர்வ் வங்கி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. கிரிப்டோ கரன்சி, நிதி ஸ்திரத்தன்மைக்கும், பணக் கொள்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் உள்ளது.

இண்டஸ்இண்ட்

மோசடி புகாரில் சிக்கிய இண்டஸ்இண்ட் வங்கி தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வரும் காலங்களில் ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், ரிசர்வ் வங்கி நிச்சயம் அதை செய்யும்.

என்ன லாபம்?

ஒருவர் 50 லட்சம் ரூபாயை, 8.50 சதவீத வட்டியில், 20 ஆண்டு காலத்தில் திருப்பி செலுத்தும் வகையில் வீட்டுக் கடன் பெற்றிருந்தால், தற்போது வட்டி அரை சதவீதம் குறைக்கப்படும்பட்சத்தில், அவருக்கு தவணைத் தொகை எவ்வளவு குறையும்?

 இதுவே இ.எம்.ஐ., மாறாதபட்சத்தில், தவணைக் காலம் 20 மாதங்கள் வரை குறையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !