சந்தை மதிப்பீட்டில் முன்னணியில் ரிலையன்ஸ்
புதுடில்லி,:கடந்த வாரத்துக்கான சந்தை மதிப்பீட்டில், 10 நிறுவனங்களில் 7 நிறுவனங்கள் 2.31 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதனத்துடன் உயர்வு கண்டன. இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மிகப்பெரிய அளவில் உயர்வு கண்டது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்.டி.எப்.சி., வங்கி, பார்த்தி ஏர்டெல், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, எஸ்.பி.ஐ., இன்போசிஸ் மற்றும் ஐ.டி.சி., ஆகியவை முதல் 10 நிறுவனங்களில் லாபம் ஈட்டியிருந்தாலும், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், பஜாஜ் பைனான்ஸ் மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகியவை சந்தை மதிப்பீட்டில் இழப்பை சந்தித்தன. ரிலையன்ஸ் தொடர்ந்து அதிக மதிப்புள்ள நிறுவனமாக தொடர்ந்தது. இதைத்தொடர்ந்து எச்.டி.எப்.சி., வங்கி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், பார்த்தி ஏர்டெல், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, எஸ்.பி.ஐ., இன்போசிஸ், பஜாஜ் பைனான்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் ஐ.டி.சி., ஆகியவை உள்ளன.