உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / இலக்குகளை எட்டும் முனைப்பில் சேலம் ஈரோடு இன்வெஸ்ட்மென்ட்ஸ்

இலக்குகளை எட்டும் முனைப்பில் சேலம் ஈரோடு இன்வெஸ்ட்மென்ட்ஸ்

புதுடில்லி: மும்பை பங்குச் சந்தை யில் பட்டியலிடப்பட்டு உள்ள நிறுவனங்களில் ஒன்றான, 'சேலம் ஈரோடு இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட்' வங்கி சாரா நிதி நிறுவனமாகும். இந்நிறுவனம், தமிழகத்தில் 22 கிளைகளுடன் இயங்கி வருகிறது. கிட்டத்தட்ட 93 ஆண்டு கால பாரம்பரிய வரலாற்றுப் பின்னணி கொண்ட இந்நிறுவனம், வருங்காலத்தில் மேற்கொள்ள உள்ள தொலைநோக்கு திட்டங்களை அறிவிப்பதன் வாயிலாக, அதன் இலக்குகளை எட்டும் முனைப்பில் உள்ளது.இந்நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான நிதி சேவைகளை வழங்கி வருகிறது. கடந்த 2019 - 20ம் நிதியாண்டில், சேலம் ஈரோடு முதலீட்டு நிறுவனத்தை, 'ஐ.சி.எல்., பின்கார்ப்' நிறுவனம் கையகப்படுத்தியது. இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான வழக்கறிஞர் கே.ஜி.அனில்குமாரின் தலைமையில், இருநிறுவனங்களும் செழித்து வளர்ந்து வருகின்றன. ஐ.சி.எல்., பின்கார்ப் வாயிலாக, முதலீட்டு வாய்ப்புகளுடன் தங்க நகைக்கடன், வணிக கடன் போன்ற ஏராளமான நிதி சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிறுவனத்தின் அணுகுமுறையால், வாடிக்கையாளர்கள் மாற்று நிதி ஆலோசகர்களை நாடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் இந்நிறுவனம் வெளியிட்ட பங்குகளாக மாறாத பத்திரங்களை, பங்குதாரர்கள் போட்டிபோட்டு வாங்கியதாகவும்; இதன் வாயிலாக, அவர்களின் நம்பிக்கையை பெற்ற நிறுவனமாக ஐ.சி.எல்., பின்கார்ப் நிறுவனம் தன்னை நிலைநிறுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. அத்துடன் ஐ.சி.எல்., பின்கார்ப் நிறுவனத்தின் கீழ், புதிய அத்தியாயத்தை துவங்க உள்ளதாகவும் தெரிவித்துஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ