உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / குஜராத் மாடலில் உப்பு உற்பத்தி அமைச்சர் கீதா ஜீவன் அறிவுரை

குஜராத் மாடலில் உப்பு உற்பத்தி அமைச்சர் கீதா ஜீவன் அறிவுரை

துாத்துக்குடி:''குஜராத் மாநிலத்தில் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தைப் போல, மழைக்காலங்களில் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, தமிழகத்தில் உப்பு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்,'' என, அமைச்சர் கீதா ஜீவன் பேசினார்.தமிழகத்தில் உப்பு உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பான தொழிநுட்ப கருத்தரங்கம், துாத்துக்குடியில் தமிழ்நாடு உப்பு கழக நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் தலைமையில் நடந்தது.சமூக நலன், மகளிர் உரிமை துறைஅமைச்சர் கீதா ஜீவன், கருத்தரங்கை துவக்கி வைத்துபேசியதாவது:உப்பு உற்பத்தியில் குஜராத் முதலிடத்திலும், ராஜஸ்தான் இரண்டாவது இடத்திலும் உள்ளன. மூன்றாவது இடத்தில் உள்ள தமிழகம் இரண்டாமிடம் வருவதற்கு உப்பு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.துாத்துக்குடி மாவட்டத்தில் ஒரு நாள் மழை பெய்தாலே, 10 நாட்கள் உப்பு உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.குஜராத் மாநிலத்தில் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தைப் போல, மழைக்காலங்களில் இங்கு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உப்பு உற்பத்தியை அதிகரிக்கவேண்டும்.இளம் தொழில்முனைவோரை உப்பு உற்பத்தி தொழிலில் ஈடுபடுத்த வேண்டும்.உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகை, 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த வகையில், 32,000 தொழிலாளர்களுக்கு, 16 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. உப்பளத் தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைத்துள்ளோம்.இவ்வாறு அவர்பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

krishna
பிப் 02, 2025 20:17

ENNA MADAM DRAVIDA MODELIL ILLAI SENGAL THIRUDAN MODELIL ELLAM URPATHI AAGIRADHU SOLLUNGA.ILLAI THURU PIDITHU IRUMBU KARAM UNGALAI PADHAVI NEEKAM SEIDHU VIDUVAAR.


பேசும் தமிழன்
பிப் 02, 2025 14:46

என்ன எப்போதும் திராவிட மாடல் என்பீர்கள்... இப்போது என்ன புதிதாக குஜராத் மாடல் என்கிறீர்கள் ???


lana
பிப் 01, 2025 15:06

திருட்டு தீய முக மாடல் இல் கொள்ளை மட்டும்தான் அடிக்க முடியும் வேற ஒன்னும் செய்யமுடியாது


Rajasekar Jayaraman
பிப் 01, 2025 06:04

ஏன் நம்ம சத்துணவு முட்டை மாடலிலே செய்யலாமே குஜராத் மாடல் எதுக்குங்க.


Rajasekar Jayaraman
பிப் 01, 2025 06:03

ஏன் நம்ம சத்துணவு முட்டை மாடலிலே செய்யலாமே குஜராத் மாடல் எதுக்குங்க.


கந்தன்
பிப் 01, 2025 05:43

பெரிய அறிவாளியா காலக் கெடுமை


புதிய வீடியோ