உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / மாதாந்திர காலாவதியால் மந்தம்

மாதாந்திர காலாவதியால் மந்தம்

• வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான நேற்று, நிப்டி சிறிய ஏற்றத்துடனும், சென்செக்ஸ் சிறிய இறக்கத்துடனும் நிறைவடைந்தன• நேற்று வர்த்தகம் ஆரம்பித்தபோது, இந்திய சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கின. மாதாந்திர காலாவதி நாளை ஒட்டி, முதலீட்டாளர்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டாததால், சிறிது நேரம் ஏற்றத்துடன் காணப்பட்ட சந்தை குறியீடுகள், ஊசலாட்டத்துக்கு திரும்பின. முடிவில், நிப்டி சற்று உயர்ந்தும், சென்செக்ஸ் பெரியளவில் மாற்றமின்றி முடிவடைந்தன• நிப்டி குறியீட்டில் வாகனம், மருந்து மற்றும் பொதுத்துறை வங்கி, ரியல் எஸ்டேட் துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் லேசான உயர்வு கண்டன. நுகர்பொருட்கள், உலோகம், வங்கி சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் லேசான இறக்கம் கண்டன. அதிகபட்சமாக, ஊடகம் சார்ந்த நிறுவனங்களின் குறியீடு 1.50 சதவீதம் இறக்கம் கண்டது• மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில், 2,334 நிறுவன பங்குகள் குறைந்தும்; 1,651 நிறுவன பங்குகள் உயர்ந்தும்; 88 நிறுவனங்களின் பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின.அன்னிய முதலீடுஅன்னிய முதலீட்டாளர்கள் நேற்று 2,377 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்று இருந்தனர்.கச்சா எண்ணெய்உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.53 சதவீதம் அதிகரித்து, 73.97 அமெரிக்க டாலராக இருந்தது.ரூபாய் மதிப்புஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 பைசா குறைந்து, வரலாறு காணாத வகையில் 85.27 ரூபாயாக இருந்தது.டாப் 5 நிப்டி 50 பங்குகள்அதிக ஏற்றம் கண்டவை அதானி போர்ட்ஸ் மஹிந்திரா & மஹிந்திரா எஸ்.பி.ஐ., லைப் மாருதி ஸ்ரீராம் பைனான்ஸ்அதிக இறக்கம் கண்டவை டைட்டன் ஏசியன் பெயின்ட் டாடா கன்ஸ்யூமர் ஜே.எஸ்.டபிள்யு., ஸ்டீல் கிராசிம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ