மேலும் செய்திகள்
தொடர் சரிவுக்கு பின் ஏற்றம்
19-Oct-2024
இந்திய பங்குச்சந்தை கடந்த வாரம் தீபாவளி சிறப்பு வர்த்தகத்தில் ஏறுமுகத்துடன் முடிந்தது. முன்னதாக வார இறுதி வர்த்தக நிறைவில், சென்செக்ஸ் மற்றும் நிப்டி இறங்குமுகத்துடன் முடிந்தன. எனினும், விடுமுறை நாளான வெள்ளி அன்று மாலை, புதிய சமாவத் ஆண்டின் துவக்கத்தின் அடையாளமாக தீபாவளி சிறப்பு வர்த்தகம் ஒரு மணி நேரம் நடைபெற்றது.சிறப்பு வர்த்தகத்தில், மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ், 335 புள்ளிகள் உயர்ந்து, 79,724 புள்ளியாக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 99 புள்ளிகள் உயர்ந்து, 24,304 புள்ளியாக இருந்தது. தொடர்ந்து ஏழாவது ஆண்டாக சிறப்பு வர்த்தகத்தில் சந்தை ஏறுமுகம் கண்டுள்ளது.
1. எம் & எம்- 2,817.00 (3.29) 2. டாடா மோட்டார்ஸ்- 843.60 (1.14) 3. ஆக்சிஸ் வங்கி- 1,169.20 (0.92)
1. எச்.சி.எல்., டெக்- 1,758.20 (0.55) 2. டெக் மகிந்திரா- 1,603.00 (0.33) 3. விப்ரோ- 551.15 (0.12)
19-Oct-2024