மேலும் செய்திகள்
டிரம்ப் அறிவிப்பால் சரிந்த சந்தை
22-Jan-2025
வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான நேற்றும், இந்திய சந்தை குறியீடுகள் லேசான இறக்கத்துடன் நிறைவு செய்தன. வர்த்தகப் போர் தொடர்பான கவலை, தொடர்ச்சியாக அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் ஆகியவற்றுக்கு மத்தியில், பணவீக்கம் தொடர்பான தரவுகள் அளித்த நம்பிக்கையால், நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போது, சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கின. வர்த்தக நேரத்தின் போது, நிப்டி, சென்செக்ஸ் தலா 1 சதவீதம் அளவுக்கு உயர்வு கண்டன. வாராந்திர காலாவதி காரணமாக, கடைசி ஒரு மணிநேரத்தில் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றதால், சந்தை சரிவை கண்டது. முடிவில், லேசான இறக்கத்துடன் நிறைவடைந்தது. தொடர்ச்சியாக, ஏழாவது வர்த்தக நாளாக நிப்டி, சென்செக்ஸ் சரிவுடன் நிறைவு செய்தன.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள், 2,790 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்றனர்.கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.94 சதவீதம் குறைந்து, 74.47 அமெரிக்க டாலராக இருந்தது.ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 பைசா அதிகரித்து, 86.93 ரூபாயாக இருந்தது.
22-Jan-2025