மேலும் செய்திகள்
வர்த்தக துளிகள்
29-Sep-2025
பங்குச்சந்தை ஒரு பார்வை
28-Sep-2025
மாநில அரசுகள் பசுமை மின்சாரம் வாங்க வலியுறுத்தல்
22-Sep-2025
அமெரிக்காவில், கடந்த பெடரல் கூட்டத்தின் 'மினிட்ஸ்' வெளியானது. பணவீக்கம் குறைந்து வருவது கண்கூடாகத் தெரிகிறது. அதனால், புதிதாக வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டாம் என்று அனைத்து உறுப்பினர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். 0.75 சதவீதம் வரை வட்டி குறைப்பு செய்யலாம் என்பதில் ஒற்றுமை ஏற்பட்டுள்ளது. ஆனால், சந்தை விரும்பியது போல், அது மார்ச் மாதம் முதலே ஆரம்பிக்கப் போவதில்லை. ஆண்டு இறுதியில் தான் நடக்கப் போகிறது. இதெல்லாம் கொஞ்சம் தெம்பையும் நம்பிக்கையையும் உலக சந்தைகளுக்குக் கொடுத்தது. நம் பங்குச் சந்தைகளும் இதனால் உற்சாகம் பெற்றன நம் வங்கிகளில் கடன் வாங்குவோர் எண்ணிக்கையும், கடன் அளவும் அதிகரித்திருக்கும் விபரம் சந்தைக்கு மகிழ்ச்சி கொடுத்தது. குறிப்பாக, மனை வணிகத் துறையில் தான் அதிக அளவு கடன் வாங்கப்பட்டிருப்பதாக அறிக்கை வெளியானதால், மனை வணிகப் பங்குகள் நல்ல லாபத்தை எட்டின நடப்பு நிதியாண்டில், முன்பு 6.20 சதவீத அளவுக்கு இந்தியாவின் வளர்ச்சி இருக்கும் என்று கணித்த 'இந்தியா ரேட்டிங்ஸ் அண்டு ரிசர்ச்' நிறுவனம், தற்போது அதை 6.70 சதவீதமாக உயர்த்தியுள்ளது ஆசிய பசிபிக் பகுதியில் 2024ல் நல்ல வளர்ச்சி இருக்கும் என்றும், அதில் இந்தியா, 5 சதவீத வளர்ச்சியைப் பெறும் என்று, மற்றொரு ஆய்வு நிறுவனமான 'பிட்ச் ரேட்டிங்க்ஸ்' தெரிவித்தது சர்வதேச பொருளாதாரத்தில் பல்வேறு சிக்கல்கள் இருந்தாலும், இந்த நிதியாண்டில், நாம் கடந்த நிதியாண்டில் செய்த அதே அளவுக்கு ஏற்றுமதியைச் செய்வோம் என்று தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார் உலகமெங்கும் பல்வேறு பாதிப்புகள் இருந்தாலும், இந்தியா எத்தகைய சவால்கள் வந்தாலும், அதை அரசியல் ரீதியாகவும்; பொருளாதார ரீதியாகவும் எதிர்கொள்ளும் திறன் பெற்றிருக்கிறது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார் பணவீக்கம் குறைந்துள்ளதாலும், கொரோனா பெருந்தொற்றுக்குப் பின், மீண்டும் கிராமப் புறங்களில் சேமிப்பு அதிகரித்துள்ளதாலும், 2024ல் கிராமங்களின் தேவை அதிகரிக்கும் என்று ஒரு தனியார் அறிக்கை தெரிவித்தது வர்த்தக நேர முடிவில், மனைவணிகம், மின்சாரம், வங்கிகள், மூலதனப் பொருட்கள், சுகாதாரம், எண்ணெய், எரிவாயு ஆகிய துறைகள் லாபம் ஈட்டின.
பஜாஜ் பைனான்ஸ் என்.டி.பி.சி., ஓ.என்.ஜி.சி., டாடா கன்ஸ்யூமர் இண்டஸ்இண்ட் வங்கி
பி.பி.சி.எல்., எல்.டி.ஐ. மைண்டுட்ரீ டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் எச்.சி.எல்., டெக்னாலஜிஸ் ஹீரோ மோட்டோகார்ப்
முந்தைய முடிவு: 71,356.60நேற்றைய முடிவு: 71,847.57மாற்றம்: 490.97 ஏற்றம் பச்சை
முந்தைய முடிவு : 21,526.20நேற்றைய முடிவு: 21,658.60மாற்றம்: 141.30 ஏற்றம் பச்சை
29-Sep-2025
28-Sep-2025
22-Sep-2025