உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

முதலீட்டாளர்களின் முன்னெச்சரிக்கை

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான நிப்டி, சென்செக்ஸ் சரிவுடன் நிறைவு செய்தன. உலகளாவிய சந்தை போக்குகளின் தொடர்ச்சியாக, நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போது, இந்திய சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கின. எனினும், அன்னிய முதலீடுகள் மீண்டும் வெளியேறுவது, இந்தியா -- அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான தாமதம் ஆகியவை காரணமாக, முதலீட்டாளர்கள் முன்னெச்சரிக்கையாக முன்னணி நிறுவன பங்குகளை விற்று லாபத்தை பதிவு செய்தனர். இதனால், பிற்பகல் வர்த்தகத்தின் போது மளமளவென சரிந்து, நிப்டி, சென்செக்ஸ் தலா 1 சதவீதத்துக்கு மேல் இறக்கம் கண்டன. தொடர்ந்து மூன்றாவது வர்த்தக நாளாக சந்தை குறியீடுகள் சரிவுடன் நிறைவடைந்தன.

சரிவுக்கு காரணங்கள்

1 இந்தியா -- அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தில் நிலவும் தாமதம்2 அன்னிய முதலீட்டாளர்கள் மீண்டும் முதலீட்டை திரும்ப பெற துவங்கியது3 பங்குகளின் உயர் மதிப்பு காரணமாக லாபத்தை ஈட்டும் முதலீட்டாளர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை