பங்குச்சந்தை
இந்திய பங்குச்சந்தை கடந்த வாரம் ஏறுமுகத்துடன் முடிந்தது. வார இறுதி வர்த்தக நிறைவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ், 260 புள்ளிகள் உயர்ந்து, 80,502 புள்ளியாக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி, 13 புள்ளிகள் உயர்ந்து, 24,347 ஆக இருந்தது. வங்கி மற்றும் ஐ.டி., துறை பங்குகள் ஏறுமுகம் கண்டன. இந்திய, அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான நம்பிக்கை, அதிக ஜி.எஸ்.டி., வசூல் உள்ளிட்ட அம்சங்கள் தாக்கம் செலுத்தின. சர்வதேச சந்தையின் வலுவான போக்கும் தாக்கம் செலுத்தியது. வெளிநாட்டு நிதி கழக முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.
ஏறுமுகம் கண்ட பங்குகள்
1. அதானி போர்ட்ஸ்- 1,267.05 (4.11) 2. பஜாஜ் பைனான்ஸ்- 8,862.25 (2.62) 3. இண்டஸ் இண்ட் பாங்க்- 852.25(1.65)
இறங்குமுகம் கண்ட பங்குகள்
1. நெஸ்லே- 2,336.80 (2.04) 2. என்.டி.பி.சி.,- 348.80 (1.61) 3. கோடக் மகிந்திரா- 2,175.90 (1.36)