பங்கு சந்தை
இந்திய பங்குச் சந்தை கடந்த வாரம் ஏறுமுகத்துடன் முடிந்தது. வார இறுதி வர்த்தக நிறைவில் மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 747 புள்ளிகள் உயர்ந்து, 82,189 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 252 புள்ளிகள் உயர்ந்து, 25,003 புள்ளிகளாக இருந்தது. பி.எஸ்.இ., மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் ஏறுமுகத்துடன் முடிந்தன. அனைத்து முக்கிய துறை பங்குகளும் ஏறுமுகம் கண்டன. ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்தது, சந்தையில் தாக்கம் செலுத்தியது. வட்டி விகிதம் தாக்கம் செலுத்தக்கூடிய துறைகளின் பங்குகளில் இது பிரதிபலித்தது.
ஏறுமுகம் கண்ட பங்குகள்
1. பஜாஜ் பைனான்ஸ்- 9,373.05 (4.93) 2. ஆக்சிஸ் வங்கி- 1,195.20 (3.15) 3. மாருதி சுசூகி- 12,443.90 (2.64)
இறங்குமுகம் கண்ட பங்குகள்
1. பார்தி ஏர்டெல்- 1,871.25 (0.39) 2. டாடா ஸ்டீல்- 157.50 (0.32) 3. சன் பார்மா- 1,679.95 (0.20)