டெக்னிக்கல் அனாலிசிஸ்: குறுகிய எல்லைக்குள் இறக்கத்துடன் வர்த்தகமாக வாய்ப்பு
நேற்று 4 புள்ளிகள் இறக்கத்துடன் தொடங்கிய நிப்டி பின்னர் குறைய ஆரம்பித்து 124 வரை இறங்கியது. பின்னர், நாளின் இறுதியில் 40 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 18ல் 11 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 7 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி ஸ்மால்கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 0.29 சதவீத உயர்வுடனும், 'நிப்டி 100' குறியீடு அதிகபட்சமாக 0.14 சதவீத சரிவுடனும் முடிந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 12 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 9 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி கெமிக்கல்ஸ்' குறியீடு அதிகபட்சமாக 1.25 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி மெட்டல்' குறியீடு அதிகபட்சமாக 1.05 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,498 நிறுவனங்களின் பங்குகளில் 1,688 ஏற்றத்துடனும்; 1,698 இறக்கத்துடனும்; 112 மாற்றம் ஏதும் இல்லாமலும் முடிவடைந்திருந்தன. 'நிப்டி 200' நாள் சராசரிக்கு (இ.எம்.ஏ.,) சற்று மேலே முடிந்துள்ளது. குறுகிய கால டெக்னிக்கல் சூழல் நிப்டி பெரிய மாற்றமின்றி பக்கவாட்டில் நகரவோ அல்லது சற்று இறக்கம் காணவோ வாய்ப்புள்ளதாக காட்டுகிறது.