வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அமேரிக்காவில் பங்குசந்தை விழுந்திருக்கு. அங்கேயிருந்து உருவி இங்கே மீண்டூம் முதலுடு செய்ய வாய்ப்பிருக்கு.
மேலும் செய்திகள்
முன்னெச்சரிக்கையால் ஏற்பட்ட சரிவு
13-Dec-2024
• வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான நேற்றும், சந்தை குறியீடுகள் இறக்கத்துடன் நிறைவடைந்தன. கடந்த மூன்று வர்த்தக நாட்களில் நிப்டி, சென்செக்ஸ் தலா 2 சதவீதத்துக்கு மேல் சரிவை கண்டுள்ளன• நேற்று வர்த்தகம் ஆரம்பித்தபோதே, இந்திய சந்தை குறியீடுகள் இறக்கத்துடன் துவங்கின. அன்னிய முதலீடுகள் வெளியேறுவது, அமெரிக்க மத்திய வங்கியின் பணக்கொள்கை முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு மற்றும் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதித்தால், இந்திய பொருட்களுக்கு அதிக வரி விதிக்க நேரிடுமென, அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்தது போன்ற நிகழ்வுகளால், முதலீட்டாளர்கள் முன்னணி நிறுவன பங்குகளை விற்பனை செய்ததால், சந்தையில் சரிவு நீடித்தது• நிப்டி குறியீட்டில், ஐ.டி., மருந்து தயாரிப்பு தவிர, அனைத்து துறை சார்ந்த நிறுவனங்களின் குறியீடுகளும் இறக்கம் கண்டன. அதிகபட்சமாக, ஊடகம், பொதுத்துறை வங்கிகள் சார்ந்த நிறுவனங்களின் குறியீடு கிட்டத்தட்ட 2 சதவீதமும், உலோகம், வங்கி, நிதி, எனர்ஜி துறை சார்ந்த நிறுவனங்களின் குறியீடு 1 சதவீதத்துக்கு மேலும் சரிவை கண்டன • மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில், 2,554 நிறுவன பங்குகள் குறைந்தும்; 1,449 நிறுவன பங்குகள் உயர்ந்தும்; 96 நிறுவனங்களின் பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின.அன்னிய முதலீடுஅன்னிய முதலீட்டாளர்கள் நேற்று 1,317 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்று இருந்தனர்.கச்சா எண்ணெய்உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று ஒரு பேரலுக்கு 0.48- சதவீதம் உயர்ந்து, 73.67 அமெரிக்க டாலராக இருந்தது.ரூபாய் மதிப்புஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 பைசா சரிந்து, 84.94 ரூபாயாக இருந்தது.டாப் 5 நிப்டி 50 பங்குகள்அதிக ஏற்றம் கண்டவை டிரென்ட் டாக்டர் ரெட்டீஸ் சிப்லா விப்ரோ ரிலையன்ஸ்அதிக இறக்கம் கண்டவை டாடா மோட்டார்ஸ் பவர்கிரிட் பெல் என்.டி.பி.சி., ஜே.எஸ்.டபிள்யு., ஸ்டீல்
அமேரிக்காவில் பங்குசந்தை விழுந்திருக்கு. அங்கேயிருந்து உருவி இங்கே மீண்டூம் முதலுடு செய்ய வாய்ப்பிருக்கு.
13-Dec-2024