எண்கள் சொல்லும் செய்தி
3.66நாட்டின் தோட்டக்கலை பொருட்கள் உற்பத்தி, நடப்பு பயிர் ஆண்டில் 3.66 சதவீதம் உயர்ந்து, 36.77 கோடி டன்னாக அதிகரித்துள்ளது என மத்திய விவசாயத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பழங்கள் மற்றும் காய்கறிகளின் உற்பத்தி அதிகரித்துள்ளதே இதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 1,95,00,000ஆதித்யா பிர்லா கேபிடல் டிஜிட்டல் நிறுவனத்தின் மொபைல் செயலியை ஹேக் செய்து, 435 வாடிக்கையாளர் கணக்குகளிலிருந்து கிட்டத்தட்ட 1.95 கோடி ரூபாய் மதிப்புள்ள டிஜிட்டல் தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் புகாரையடுத்து, நிறுவனத்தின் விசாரணைக்கு பின், மும்பை போலீசில் புகார் அளித்துள்ளது.