உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி

5

கடந்த 2024- - 25ம் நிதியாண்டில், நாட்டின் ஒட்டுமொத்த ஜவுளி, ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் 5 சதவீதம் அதிகரித்து, 3.21 லட்சம் கோடி ரூபாயாகி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. முந்தைய 2023- - 24ம் நிதியாண்டில், 3.05 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தது.

3,40,00,000

அமெரிக்க பங்கு சந்தையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3.40 லட்சம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது. அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்கள் பட்டியலில், என்விடியாவுக்கு அடுத்து, இரண்டாவது நிறுவனமாக மைக்ரோசாப்ட் இடம்பெற்றுள்ளது. இதன் கிளவுட் கம்ப்யூட்டிங், ஏ.ஐ., பிரிவுக்கான தேவை அதிகரிப்பால், பங்கு விலை உயர்வு கண்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ