மருந்தக வணிகத்தில் சிம்ஸ்
சென்னை:எஸ்.ஆர்.எம்., குழுமத்தைச் சேர்ந்த 'சிம்ஸ்' மருத்துவமனை, 'சிம்ஸ் பார்மசி' எனும் பெயரில், சென்னையில், 10 மெட்ரோ ரயில் நிலையங்களில் மருந்தகங்களை துவக்கியுள்ளது.சென்னை வடபழனி, சென்ட்ரல், கோயம்பேடு, எழும்பூர், அரசினர் தோட்டம், உயர் நீதிமன்றம், திருமங்கலம், ஆயிரம்விளக்கு, ஆலந்துார் மற்றும் கோயம்பேடு சி.எம்.பி.டி., ஆகிய 10 மெட்ரோ ரயில் நிலையங்களில் சிம்ஸ் பார்மசி பெயரில், சிம்ஸ் மருத்துவமனையின் மருந்தகங்கள் துவங்கப்பட்டுள்ளன.