உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / துாரத்து இடி முழக்கம்

துாரத்து இடி முழக்கம்

• நேற்றைய வர்த்தகத்தில் பங்கு சந்தை குறியீடுகள், கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத வகையில் சரிந்தன• லஞ்சம் மற்றும் மோசடி வழக்கில், கவுதம் அதானிக்கு எதிராக நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்ததை அடுத்து, அதானி குழும நிறுவன பங்குகள் கடும் சரிவை கண்டன• அதானி குழும நிறுவன பங்குகள் சரிவுடன், அன்னிய முதலீடுகள் வெளியேறுவது, ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் மந்தமான போக்கு ஆகியவையும் சேர்ந்து கொண்டதும், சரிவுக்கு மேலும் வழிவகுத்தது• நேற்றைய வர்த்தகத்தில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு மொத்தம் 5.27 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது• மும்பை பங்கு சந்தையில் இடம்பெற்றுள்ள 21 துறை குறியீடுகளில், 16 துறைகள் சரிவை கண்டன; ஐந்து துறைகள் ஏற்றம் கண்டன. ரியல் எஸ்டேட் துறை அதிக ஏற்றத்தையும்; சேவைகள் துறை அதிக இறக்கத்தையும் கண்டன.

அன்னிய முதலீடு

அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று ---5,321 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்பனை செய்திருந்தனர்.

கச்சா எண்ணெய்

உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 1.13 சதவீதம் அதிகரித்து, 73.71 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 8 ----பைசா சரிந்து, 84.50 -----ரூபாயாக இதுவரை இல்லாத அளவில் சரிவை கண்டது.டாப் 5 நிப்டி 50 பங்குகள்அதிக ஏற்றம் கண்டவை பவர்கிரிட் அல்ட்ராசெம் ஹிண்டால்கோ அப்பல்லோ ஹாஸ்பிட்டல் கிராசிம்அதிக இறக்கம் கண்டவை அதானி எண்டர்பிரைசஸ் அதானி போர்ட்ஸ் எஸ்.பி.ஐ., லைப் எஸ்.பி.ஐ., என்.டி.பி.சி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை