உள்ளூர் செய்திகள்

வர்த்தக துளிகள்

கணிப்பை குறைத்த உலக வங்கி

உலகளாவிய பொருளாதார பலவீனம் மற்றும் நிலையற்றத்தன்மை காரணமாக, 2025--26ம் நிதியாண்டுக்கான, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.30 சதவீதமாக குறையுமென உலக வங்கி கணித்துள்ளது. இதற்கு, முந்தைய கணிப்பில் 2025--26ம் நிதியாண்டில், இந்திய பொருளாதாரம் 6.7 சதவீதம் வளர்ச்சி காணும் என தெரிவித்து இருந்த நிலையில், தற்போது 40 அடிப்படை புள்ளிகள் குறைத்து உள்ளது. அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு தாக்கத்தால், நடப்பு நிதியாண்டுக்கான இந்திய பொருளாதார வளர்ச்சி கணிப்பை 6.7 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக ரிசர்வ் வங்கி குறைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்வாங்கும் எல்.ஜி., ஐ.பி.ஓ.,

தென்கொரியாவை தலைமையிடமாக கொண்ட மின்னணு பொருட்கள் தயாரிப்பாளரான எல்.ஜி.,எலக்ட்ரானிக்ஸ் இந்தியா, புதிய பங்கு வெளியீடுக்கான நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன் பங்குச்சந்தையில் ஏற்ற, இறக்கங்களை காரணமாக கூறி, ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஐ.பி.ஓ.,வை தள்ளி வைத்தது போன்று, சந்தை சீரான நிலைக்கு திரும்பிய பின்னர், மீண்டும் ஐ.பி.ஓ., நடவடிக்கைகள் துவங்குவது தொடர்பாக முடிவெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை