மேலும் செய்திகள்
புதிய நிர்வாகிகள் தேர்வு
22-Aug-2025
பஜாஜ் அலையன்ஸ் பாலிசிதாரர்கள் பணமில்லாமல் சிகிச்சை பெறலாம் பஜாஜ் அலையன்ஸ் நிறுவனம், பாலிசிதாரர்களின் சிகிச்சைக் கட்டணத்தை மருத்துவமனைகளுக்கு முழுமையாக திருப்பிச் செலுத்தாததால், அதன் பாலிசிதாரர்களுக்கு செப்டம்பர் 1ம் தேதி முதல் பணமில்லாமல் சிகிச்சை அளிக்க வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டது. அந்நிறுவனத்துடன் இந்திய சுகாதார நிறுவனங்களின் கூட்டமைப்பு 28ம் தேதி நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதால் , பணமில்லாமல் சிகிச்சை அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 'அப்கான்ஸ்' செயல் தலைவரானார் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் உள்கட்டமைப்பு நிறுவனமான 'அப்கான்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்' நிறுவனத்தின் செயல் தலைவராக கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இதுவரை இந்நிறுவனத்தின் துணை செயல் தலைவராக இருந்து வந்தார். நிறுவனத்தின் தலைவராக இருந்த ஷாபூர்ஜி மிஸ்திரி கவுரவ தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். பலோன் எஸ் மிஸ்திரி அதன் நிர்வாகக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
22-Aug-2025