உள்ளூர் செய்திகள்

வர்த்தக துளிகள்

கர்நாடகாவில் ஸ்டீல் ஆலை

அமைக்கிறது முகுந்த் சுமி

மு குந்த் சுமி ஸ்பெஷல் ஸ்டீல் நிறுவனம், கர்நாடகாவின் கொப்பால் எனும் இடத்தில், 2,345 கோடி ரூபாய் முதலீட்டில் ஒருங்கிணைந்த ஸ்டீல் உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது. இந்தியாவின் பஜாஜ் குழுமம் மற்றும் ஜப்பானின் சுமிடோமோ நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் துவக்கப்பட்ட முகுந்த் சுமி நிறுவனம், ஏற்கெனவே, இந்தியாவில் ஆண்டுக்கு 3.50 லட்சம் டன் ஸ்டீலை உற்பத்தி செய்து வருகிறது. ரூ.5,000 கோடியில் பேட்டரி ஆலை அசோக் லேலண்ட் முதலீடு அ சோக் லேலண்ட் நிறுவனம் சீனாவின் சி.ஏ.எல்.பி., நிறுவனத்துடன் இணைந்து அடுத்த தலைமுறை பேட்டரிகளை உருவாக்க 5,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவில் பேட்டரி சப்ளையை அதிகப்படுத்தி மின்சார வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், டீசல், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருளை சார்ந்திருப்பதை குறைக்கவும் இந்த முதலீடு உதவும் என்று, அசோக் லேலண்டின் தலைவர் தீரஜ் இந்துஜா கூறியுள்ளார். டெஸ்ஸோவுக்கு ரூ.1,320 கோடி டி.பி.ஜி., நிறுவனம் வழங்கியது ஹீ ரோ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான செமி கண்டக்டர் இஞ்ஜினீயரிங் சேவை நிறுவனமான டெஸ்ஸோவ், டி.பி.ஜி., முதலீட்டு நிறுவனத்திடம் இருந்து 1,320 கோடி நிதியை பெற்று உள்ளது. சர்வதேச அளவில் தங்கள் விநியோக சேவையை வலுப்படுத்தவும், சோதனை மையங்களை விரிவாக்கவும் இது பயன்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் இந்தியா மற்றும் உலகளாவிய செமிகண்டக்டக்டர் சுற்றுச் சூழல் அமைப்பில் டெஸ்ஸாவ் முக்கிய பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை