வர்த்தக துளிகள்
சீனாவுக்கு 12,000 டன் கச்சா தாமிரம் விற்பனை செய்து சத்தீஸ்கர் சாதனை
சீ னாவுக்கு 12,000 மெட்ரிக் டன் கச்சா தாமிரத்தை ஏற்றுமதி செய்து சத்தீஸ்கர் புதிய சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் இருந்து சீனாவுக்கு இந்தளவு ஏற்றுமதி செய்யப்படுவது இதுவே முதல்முறை. நாட்டின் தொழில் மற்றும் தளவாட துறையில், சத்தீஸ்கரின் பங்களிப்பு அதிகரித்து வருவதை இது காட்டுகிறது.நவ ராய்ப்பூரில் உள்ள மல்டி-மோடல் லாஜிஸ்டிக்ஸ் பூங்காவில் இருந்து அனுப்பப்பட்ட இவை, விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து, கப்பல் வாயிலாக சீனாவுக்கு செல்ல உள்ளன.
இந்தியாவில் புதிய தரவு மையம் பிளாக்ஸ்டோனின் ஏர்டிரங்க் திட்டம்
இ ந்தியாவில் ஏ.ஐ., தொழில்நுட்பம் வேகமாக வளரும் நிலையில், அதன் தேவையை கருத்தில் கொண்டு, புதிய தரவு மையம் அமைக்க ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தரவு மைய சேவைகள் நிறுவனமான, 'ஏர்டிரங்க்' திட்டமிட்டு உள்ளது. ஏர்டிரங்க் நிறுவனத்தை, அமெரிக்க முதலீட்டு நிறுவனமான பிளாக்ஸ்டோன் 1.40 லட்சம் கோடி ரூபாய்க்கு கடந்தாண்டு கையகப்படுத்தி இருந்தது. ஏ.ஐ., முதலீட்டில், உலகளாவிய அலை காணப்படுவதாக ஏர்டிரங்க் நிறுவன சி.இ.ஓ., ராபின் குடா தெரிவித்துள்ளார்.