| ADDED : நவ 26, 2024 11:20 PM
• வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் லேசான இறக்கத்துடன் நிறைவடைந்தன • கிட்டத்தட்ட 38 அமர்வுகளுக்கு பின், அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் மீண்டும் முதலீடு செய்ய துவங்கியதால், இந்திய சந்தை குறியீடுகள் வர்த்தகம் ஆரம்பித்த போது உயர்வுடன் துவங்கின. ஆனால், மெக்ஸிகோ, கனடா மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு, கூடுதல் வரியை விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப் அறிவித்ததை தொடர்ந்து, சந்தையில் ஊசலாட்டம் ஏற்பட்டது. முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் தயக்கம் காட்டியதால், சந்தை குறியீடுகள் இறக்கத்துடன் நிறைவு செய்தன • நிப்டி குறியீட்டில் தகவல் தொழில்நுட்பம், நுகர்வோர் பொருட்கள் மற்றும் மீடியா துறை சார்ந்த பங்குகள் ஓரளவு ஏற்றம் கண்டன. வாகனம், மருந்து மற்றும் எனர்ஜி துறை சார்ந்த பங்குகள் இறக்கம் கண்டன• மும்பை பங்குச் சந்தையில், 2,277 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தும்; 1,644 நிறுவனங்களின் பங்குகள் குறைந்தும்; 110 நிறுவனங்களின் பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின.அன்னிய முதலீடுஅன்னிய முதலீட்டாளர்கள் நேற்று 1,158 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை வாங்கி இருந்தனர். கச்சா எண்ணெய்உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.71 சதவீதம் அதிகரித்து, 73.58 அமெரிக்க டாலராக இருந்தது.ரூபாய் மதிப்புஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு எவ்வித மாற்றமுமின்றி, 84.29 ரூபாயாக இருந்தது.டாப் 5 நிப்டி 50 பங்குகள்அதிக ஏற்றம் கண்டவை ஸ்ரீராம் பைனான்ஸ் பிரிட்டானியா ஏசியன் பெயின்ட் பெல் இன்போசிஸ்அதிக இறக்கம் கண்டவை அதானி என்டர்பிரைசஸ் அதானி போர்ட்ஸ் அல்ட்ராடெக் சிமென்ட் பஜாஜ் ஆட்டோ சன் பார்மா