உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / வைஸ்ராய் அறிக்கை நம்பகமற்றது: சந்திரசூட் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் பரிந்துரை

வைஸ்ராய் அறிக்கை நம்பகமற்றது: சந்திரசூட் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் பரிந்துரை

புதுடில்லி:வேதாந்தா குழுமத்துக்கு எதிரான வைஸ்ராய் ரிசர்ச் நிறுவனத்தின் அறிக்கை நம்பகத்தன்மையற்றது என, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.பங்குச் சந்தை ஷார்ட் செல்லிங் வணிகத்தில் ஈடுபட்டுள்ள வைஸ்ராய் ரிசர்ச், கடந்த வாரம் வேதாந்தா குழுமம் குறித்து அறிக்கை வெளியிட்டது. வேதாந்தாவின் வணிக நடைமுறைகள் நிலையானது அல்ல; இதனால் நிறுவனம் திவாலாகும் என்று அதில் தெரிவித்திருந்தது.இவை அனைத்தும் ஆதாரமற்ற, தவறான குற்றச்சாட்டுகள் என வேதாந்தா மறுத்த போதிலும், இந்த எதிர்மறையான அறிக்கையால், பங்குச் சந்தையில் வேதாந்தாவின் பங்கு விலை குறிப்பிடத்தக்க அளவு சரிந்தது.இதையடுத்து, வைஸ்ராய் ரிசர்ச்சின் அறிக்கை குறித்து, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் வேதாந்தா தனிப்பட்ட முறையில் சட்ட ஆலோசனை கேட்டுள்ளது. அவர் அளித்த ஆலோசனையில் கூறியதாவது:பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக, தவறான ஆய்வறிக்கைகளை வெளியிட்டு, இதனால் ஏற்படும் பங்கு விலை சரிவைக் கொண்டு அதிக லாபம் ஈட்டுவதை வைஸ்ராய் ரிசர்ச் வழக்கமாக கொண்டுள்ளது.வேதாந்தாவுக்கு எதிரான அறிக்கையில் வைஸ்ராய் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளால், வேதாந்தாவின் வணிகத்துக்கும், மதிப்புக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், வேதாந்தா சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து நிவாரணம் கோரலாம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !