உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதிய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி

புதிய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி

புதுடில்லி: மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படுகிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ரயில்வே துறைக்கு திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தினேஷ் திரிவேதி அமைச்சராகிறார். மத்திய அமைச்சரவை மிகப்பெரிய அளவில் மாற்றியமைக்கப்படுகிறது. சில அமைச்சர்கள் நீக்கப்பட்டு, சிலர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்படுகின்றனர். சிலரது இலாகாக்கள் மாற்றியமைக்கப்படுகிறது.

நீக்கப்படும் அமைச்சர்கள்: தயாநிதி, முரளி தியோரா, ஹண்டிக், எம்.எஸ். கில், கண்டிலால் புரியா, சாய் பிரதாப் மற்றும் அருண் யாதவ்

புதிய அமைச்சர்கள்: ஜெயந்தி நடராஜன், பபன் சிங் கடோவர், தினேஷ் திரிவேதி, கி÷ஷார் சந்திர தியோ, சுதீப் பந்தோபாத்யாயா, சரண் தாஸ் மகந்த், ஜிதேந்திர சிங், மிலிந்த் தியோரா, ராஜிவ் சுக்லா.

இலாகா மாற்றம்: ஜெய்ராம் ரமேஷ்க்கு கிராமப்புற மேம்பாட்டு துறைக்கு மாற்றப்படுகிறார். விலாஷ்ராவ் தேஷ்முக் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை வழங்கப்படுகிறது. சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கம்பெனி விவகாரத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். சல்மான் குர்ஷித்துக்கு சட்டத்துறைக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை