உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு

இடுக்கி: முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 121 அடியாக உயர்ந்துள்ள நிலையில், அதிலிருந்து தமிழகத்திற்கு, வினாடிக்கு 1,230 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு வினாடிக்கு, 1,124 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கேரளாவில் தென்மேற்குப் பருவமழை வலுத்து வருவதால், முல்லைப் பெரியாறு அணையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, அணைக்கு, வினாடிக்கு 1,124 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், தற்போது அணையின் நீர்மட்டம் 121 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து தமிழகத்திற்கு பொன்ஸ்ட்ரோக் கால்வாய் வழியாக, வினாடிக்கு 1,230 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. மழை காரணமாக, அணையின் நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ