உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டெஸ்ட் அணிக்கு வருகிறார் விராட் கோஹ்லி

டெஸ்ட் அணிக்கு வருகிறார் விராட் கோஹ்லி

மும்பை: காயமடைந்த யுவராஜ் சிங்கிற்கு பதிலாக, இந்திய டெஸ்ட் அணியில் விராட் கோஹ்லி இடம்பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா இங்கிலாந்து இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதில் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், இத்தொடரில் கலந்து கொண்டுள்ள இந்திய வீரர்கள் பலர் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். ஜாகீர் கான், ஹர்பஜன் சிங்கை தொடர்ந்து யுவராஜ் சிங்கும் காயமடைந்துள்ளார். இதையடுத்து, ஹர்பஜன் சிங்கிற்கு பதிலாக பிரக்யான் ஓஜாவும், யுவராஜூக்கு பதிலாக விராட் கோஹ்லியும் இந்திய டெஸ்ட் அணியில் விளையாடவுள்ளனர். இதற்காக இவர்கள் இருவரும் இங்கிலாந்து செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை