மேலும் செய்திகள்
லோக்சபாவில் பேச அனுமதிக்கவில்லை: ராகுல் குற்றச்சாட்டு
1 hour(s) ago
புதுடில்லி: லோக்சபாவில் அன்னா ஹசாரே குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், ஹசாரே கைது செய்யப்பட்டது தவிர்க்கமுடியாதது. ஆனால் எதிர்பாராதது. ஹசாரே விரும்பும் இடத்தில் போராட்டம்நடத்த உரிமை உண்டு ஆனால் ஒரு சில விதிகள் உண்டு. இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அரசியல் ரீதியிலான முடிவு எடுக்கப்படும். சமூக ஆர்வலர்கள் சட்டம் இயற்றுவதில் பார்லிமென்ட்டின் அதிகாரத்தை குறைக்கக்கூடாது. ஹசாரே விவகாரத்தை அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் நேர்மையான முறையில் எந்தவித சச்சரவும் இன்றி கையாள்வோம். பார்லிமென்ட் மீது நம்பிக்கை உள்ளது. ஆனால் பார்லிமென்ட் உறுப்பினர்கள் மீது நம்பிக்கை இல்லை என்ற ஹசாரேவின் கருத்து திகைப்படைய செய்கிறது. ஜன் லோக்பால் மசோதாவைத்தான் நிறைவேற்ற வேண்டும் என்ற ஹசாரேவின் கோரிக்கையை பார்லிமென்ட் நிராகரிக்க வேண்டும் என்று கூறினார்.
1 hour(s) ago