உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஊடுருவலைத்தடுக்க சி.ஆர்.பி.எப்., போலீஸ் படை: சிதம்பரம்

ஊடுருவலைத்தடுக்க சி.ஆர்.பி.எப்., போலீஸ் படை: சிதம்பரம்

புதுடில்லி: அருணாச்சல பிரதேசத்தில் அன்னிய ஊடுருவலைத் தடுக்க 4 பட்டாலியன் சி.ஆர்.பி.எப்., படைகள் அனுப்பி வைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். டில்லியில் நிருபர்களிடம் பேசிய அவர், நாட்டில் மாவோயிஸ்டுகள் அதிகமுள்ள பகுதிகளில் 5 புதிய சி.ஆர்.பி.எப்., படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவித்தார். மேலும் அருணாச்சல பிரதேசத்தில் அன்னிய ஊடுருவலைத் தடுக்க 4 பட்டாலியன் சி.ஆர்.பி.எப்., படைகள் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்த அவர், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,க்கும் இதர பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடையே தொடர்பு உள்ளதாக அமெரிக்கா கண்டுபிடித்திருப்பது தங்களுக்கு வியப்பளிக்கவில்லை என்றும் தெரிவித்தார். தெலுங்கானா விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த சிதம்பரம், ஆந்திர காங்கிரஸ் தலைமை இதுகுறித்து நாளை அறிக்கை ஒன்றை வெளியிடும் என்று தெரிவித்தார். மேலும் அப்சல் குருவின் கருணை மனு மீது அரசு இன்னும் முடிவு ஏதும் எடுக்கவில்லை என்றும் சிதம்பரம் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ