வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வெளிநாட்டு சக்திகளை ஒடுக்கினால், அமைதி நிலவும். வெளிநாட்டு மதபோதகர்களை அடக்குவது நல்லது.
இம்பால் : மணிப்பூரில் ட்ரோன் மற்றும் ராக்கெட் தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாணவர் அமைப்பினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வர் பைரேன் சிங் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கும் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், கடந்த ஆண்டு மே மாதம், கூகி - மெய்டி பிரிவினரிடையே இனக் கலவரம் வெடித்தது. இதில், 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கைகளால், மணிப்பூரில் இயல்புநிலை படிப்படியாக திரும்பி வந்த நிலையில், அங்கு மீண்டும் வன்முறை சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. கடந்த முறை போலல்லாமல் தற்போது ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள், வெடி மருந்துகள் நிரப்பிய ராக்கெட் உள்ளிட்டவற்றால், ஆயுதமேந்திய குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன.இதனால், மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் கடந்த 7ம் தேதி நடந்த வன்முறை சம்பவங்களில், எட்டு பேர் கொல்லப்பட்டனர்; 12 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், ட்ரோன்கள் மற்றும் ராக்கெட் வாயிலாக தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கவர்னர் மாளிகை, தலைமைச் செயலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு மணிப்பூர் மாணவர் அமைப்பினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, முதல்வர் பைரேன் சிங் மற்றும் கவர்னர் ஆச்சார்யாவை சந்தித்து பேசிய அவர்கள், மாநிலம் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்தனர்.இது குறித்து மாணவர் அமைப்பைச் சேர்ந்த சனதோய் சானு கூறியதாவது: வன்முறையைக் கட்டுப்படுத்தத் தவறியதாகக் கூறப்படும் டி.ஜி.பி., மற்றும் மாநில அரசின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரை பதவிநீக்கம் செய்வது உட்பட ஆறு கோரிக்கைகளை அவர்களிடம் முன்வைத்தோம்.முன்னாள் சி.ஆர்.பி.எப்., - டி.ஜி., குல்தீப் சிங் தலைமையில் செயல்படும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு படை முதல்வர் வசம் இருக்க வேண்டும்.நாங்கள் இடையூறு இல்லாமல் சுதந்திரமாகப் படிக்க விரும்புகிறோம். ஆகவே, மோதலை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர முதல்வரிடம் வலியுறுத்தினோம்.இவ்வாறு அவர் கூறினார்.
வெளிநாட்டு சக்திகளை ஒடுக்கினால், அமைதி நிலவும். வெளிநாட்டு மதபோதகர்களை அடக்குவது நல்லது.