உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மும்பையில் ரூ.11 கோடி மதிப்புள்ள தங்கம், வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்: சுங்கத்துறை அதிரடி

மும்பையில் ரூ.11 கோடி மதிப்புள்ள தங்கம், வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்: சுங்கத்துறை அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மும்பை விமான நிலையத்தில், கடந்த 4 நாட்களில் ரூ.11 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை விமான நிலையத்தில் போதைப்பொருட்கள் மற்றும் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, கடந்த ஜூலை 10ம் தேதி முதல் ஜூலை 14ம் தேதி வரை சுங்கத்துறை அதிகாரிகள், பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.

வெளிநாட்டு கரன்சிகள்

இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ரூ.11 கோடி மதிப்புள்ள 13.24 கிலோ தங்கம் மற்றும் மொபைல் போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 45 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ரூ.11 கோடி

பயணிகள் உடைகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஏழு பயணிகள் கைது செய்யப்பட்டனர். கடந்த 4 நாட்களில், மொத்தம் ரூ.11 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

mei
ஜூலை 17, 2024 15:58

ஒரு மார்க்கமான செய்தி தான்


Anbu Raj
ஜூலை 17, 2024 14:26

வரி அதிகமாக இருப்பதால் கடத்துகிறார்கள் இந்தியாவில் வரி குறைந்தாலே கடத்தல் நின்று விடும் ,


வாய்மையே வெல்லும்
ஜூலை 17, 2024 13:29

அமைதிக்கு சாம்பிராணி போடவும் . கள்ளக்கடத்தல் செய்துவிட்டு ராவுலு மூலம் அரசியல் குட்டையை குழப்பி துள்ளி குதிக்க வேண்டியது


selvam
ஜூலை 17, 2024 13:16

கடத்தல் காரர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.. அப்போது தான் கடத்தல் சம்பவம் குறையும்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை