மணிப்பூரில் ஆயுதங்கள் பறிமுதல்
இம்பால் : வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், கூகி மற்றும் மெய்டி இனத்தவர் இடையே இட ஒதுக்கீடு தொடர்பாக இனக்கலவரம் வெடித்தது. தொடர்ந்து நடந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டனர். இங்கு அமைதி திரும்பி வந்த நிலையில், கடந்த 26ம் தேதி இம்பால் மேற்கு மாவட்டத்தின் லேய்கிந்தாபி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் இருந்து, மர்மநபர்கள் சிலர் மூன்று துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை பறித்து சென்றனர்.இதையடுத்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், சேக்தா அவாங் லைகாய் பகுதியில் இருந்து துப்பாக்கிகள், ஏராளமான துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக நான்கு போலீசார் மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.இதுபோல் காக்சிங் மாவட்டத்தின் வாபாகாய் நடேகோங் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய மற்றொரு தேடுதல் வேட்டையில் ஐந்து துப்பாக்கிகள், 10 கையெறி குண்டுகள், புல்லட் புருப் ஜாக்கெட்கள், வயர்லெஸ்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.