உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுவிஸ் வங்கிகளில் குறையும் இந்தியர்களின் டிபாசிட்கள்

சுவிஸ் வங்கிகளில் குறையும் இந்தியர்களின் டிபாசிட்கள்

புதுடில்லி:சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் டிபாசிட்கள் மற்றும் முதலீடுகளின் மதிப்பு, கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்தாண்டு 9,771 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது, கடந்த 2022ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 70 சதவீதம் குறைவாகும்.இந்தியாவில் உள்ள சுவிட்சர்லாந்து வங்கிகளின் கிளைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள டிபாசிட்களும் இதில் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன. இவை தொடர்பான தரவுகளை, சுவிட்சர்லாந்து நாட்டின் மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.கடந்த 2006ம் ஆண்டு, இந்தியர்கள் சுவிஸ் வங்கிகளில், அதிகபட்சமாக 61,000 கோடி ரூபாய் வைத்திருந்தனர்.அதன்பின் ஒரு சில ஆண்டுகள் தவிர, பெருவாரியான ஆண்டுகளில் இந்த தொகை சரிந்து கொண்டே தான் வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு, டிபாசிட்களின் எண்ணிக்கை 14 ஆண்டு உச்சமாக 35,918 கோடி ரூபாயை எட்டியது. அதன்பின், தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது.இது, இந்தியர்கள் சுவிட்சர்லாந்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் கருப்பு பணம் கிடையாது. பிற நாடுகளின் நிறுவனங்களின் பெயர்களில் அவர்கள் மேற்கொள்ளும் முதலீட்டையும் இது கணக்கில் கொள்ளாது. சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளிலும், நம் நாட்டிலுள்ள அவற்றின் கிளைகளிலும் உள்ள இந்தியர்களின் டிபாசிட்கள் மற்றும் கடன் பத்திர முதலீடுகள் பற்றிய தகவல் மட்டுமே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்புசாமி
ஜூன் 21, 2024 09:08

பிட் காயினுக்கு மாத்தி ரொம்ப நாளாச்சு


தாமரை மலர்கிறது
ஜூன் 21, 2024 01:41

பணமுடக்கத்தின் விளைவால் கருப்பு பணம் முற்றிலும் ஒழிந்து விட்டது. மீண்டும் ஒரு தடவை பணமுடக்கத்தை கொண்டு வந்தால், கருப்பு பணம் பத்துக்குவோர் எதிர்காலத்தில் ஒருபோதும் செய்யமாட்டார்கள்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை