மேலும் செய்திகள்
பலாத்கார வழக்கு: மாஜி எம்.எல்.ஏ., ஆயுள் தண்டனை நிறுத்தம்
58 minutes ago
கேரளாவின் இரு மாவட்டங்களில் பரவுகிறது பறவை காய்ச்சல்
1 hour(s) ago
ரூ.12 கோடி செலவில் 51 ஜீப்கள்; ஒடிஷா வனத்துறை தாம் துாம்
1 hour(s) ago
பிரதமர் நரேந்திர மோடி, போலந்து பிரதமர் டொனால்டு டக்ஸ் சந்திப்பின்போது பல முக்கிய இரு தரப்பு உறவுகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. வெறும் இரு தரப்பு உறவாக இல்லாமல், 'ஸ்டாடர்ஜிக் பார்ட்னர்ஷிப்' எனப்படும் பலதுறைகளில் இணைந்து செயலாற்றும் கூட்டாளிகளாக விளங்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.ராணுவம், வர்த்தகம், வேளாண் தொழில்நுட்பம், எரிசக்தி, பசுமை தொழில்நுட்பம் எனப்படும் மாசில்லா தொழில்நுட்பம், கட்டமைப்பு வசதிகள், மருந்து தயாரிப்பு, சுரங்கம் உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவது தொடர்பாக இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டது. இதற்காக, 2024 - 2028 வரையிலான ஐந்தாண்டு செயல் திட்டம் வெளியிடப்பட்டது.பயங்கரவாத எதிர்ப்பு, பருவநிலை மாறுபாடு, ஐ.நா., உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தம் என உலகளாவிய விவகாரங்களில் இணைந்து செயல்படுவது தொடர்பாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.மிகவும் முக்கியமாக, 27 நாடுகள் அடங்கிய, ஐரோப்பிய யூனியனுடன், இந்தியா தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்வதில் அடுத்தக்கட்ட முன்னேற்றம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. ஐரோப்பிய யூனியனின் தலைமை பொறுப்பை அடுத்தாண்டு ஜன.,ல் போலந்து ஏற்க உள்ளது. அப்போது இந்த ஒப்பந்தம் தொடர்பாக இறுதி செய்வதில் உதவுவதாக டஸ்க் உறுதியளித்துள்ளார்.இந்தியா - ஐரோப்பிய யூனியன் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் நடைமுறைக்கு வருவது உள்ளிட்டவையும் இதில் அடங்கும்.ராணுவத் தளவாடங்களை உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியாவின் முயற்சியில் இணைந்து கொள்ளவும் போலந்து உறுதி அளித்துள்ளது.இது பிரதமர் மோடியின் போலந்து பயணத்தின் முக்கிய வெற்றியாக கருதப்படுகிறது.அந்த நாட்டின் அதிபர் ஆன்த்ரீஸ் டூடாவையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
58 minutes ago
1 hour(s) ago
1 hour(s) ago