உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காசா கிராண்ட் நிறுவனத்தின் விளம்பர துாதரானார் கங்குலி

காசா கிராண்ட் நிறுவனத்தின் விளம்பர துாதரானார் கங்குலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை,: கட்டுமான திட்டங்களின் விளம்பர துாதராக, முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியை, காசா கிராண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில், காசா கிராண்ட் நிறுவனம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அடுத்தடுத்து பல்வேறு புதிய அடுக்குமாடி திட்டங்களை, இந்நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.மக்களின் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கும் வகையில், அடுக்குமாடி திட்டங்களில் ஏற்படுத்தப்படும் வசதிகள் குறித்து, மக்களிடம் பிரசாரம் செய்யும் திட்டத்தை, காசா கிராண்ட் நிறுவனம் துவக்கியுள்ளது.இத்திட்டங்களில் உள்ள சிறப்பு அம்சங்களை மக்களிடம் எளிதாக கொண்டு சேர்க்க, முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியை, விளம்பர துாதராக காசா கிராண்ட் நிறுவனம் நியமித்துள்ளது.இந்நிறுவனத்தின் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களின் சிறப்பு அம்சங்களை, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் வாயிலாக, நாடு முழுதும் பிரசாரம் செய்ய, இந்த இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. இதற்கான பிரதான துாதராக சவுரவ் கங்குலி செயல்படுவார் என, காசா கிராண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

RAAJ68
செப் 05, 2024 04:52

இது பெரிய நிறுவணம். கோடீஸ்வரன் களுக்கு மட்டுமே. லட்சங்கள் எல்லாம் மிகவும் சாதாரணம். கங்குலி க்கு கொடுக்கப்படும் கோடிகள் வீடுகள் வாங்குபவர்களின் தலையில் தான் விழும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை