உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் துப்பாக்கிச்சண்டை

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் துப்பாக்கிச்சண்டை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜம்மு-காஷ்மீரின் உதாம்பூர் மாவட்டம் பாசந்த்கார்க் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு பாதுகாப்புபடையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை பாதுகாப்புடையினர் சுற்றிவளைத்தனர். இதில் இரு தரப்பிற்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதாகவும் இதில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு கூடுதலாக பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் துப்பாக்கிச்சூடு நீடித்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Rpalnivelu
ஆக 07, 2024 13:34

விசாரணை முடிந்ததும் என்கவுந்டர் செய்வதே சிறந்தது


Kasimani Baskaran
ஆக 07, 2024 05:58

நேரடியாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் விட்டு விடுவது நல்லது. எல்லைப்பாதுகாப்புப்படை இராணுவம் போல வராது.


Ramesh Sargam
ஆக 06, 2024 21:28

காஸ்மீரில் உள்ள அனைத்து பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்படவேண்டும்.


rama adhavan
ஆக 07, 2024 01:46

அவ்வளவு சுலபம் அல்ல. பலர் பசு தோல் போர்த்திய புலிகளாக உள்ளனர். பலர் 5ம் படைகளாக உள்ளார்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை