உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மம்முட்டிக்கு அநீதி; தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்படாத படங்கள் : தேர்வுக் குழு பகீர்

மம்முட்டிக்கு அநீதி; தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்படாத படங்கள் : தேர்வுக் குழு பகீர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: தேசிய விருதுக்கு கேரள முன்னணி நடிகர் மம்முட்டியின் திரைப்படம் ஒன்று கூட பரிந்துரைக்கப்படவில்லை என்று தேர்வுக்குழு கூறியிருப்பது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய விருது

2022ம் ஆண்டுக்கான தேசிய விருதை மத்திய அரசு நேற்று முன்தினம் (ஆக.,16) அறிவித்தது. அதில், சிறந்த படமாக மலையாளத்தில் எடுக்கப்பட்ட ஆட்டம் படம் தேர்வானது. சிறந்த நடிகராக ரிஷப் ஷெட்டியும், சிறந்த நடிகையாக மானஷி பரேக் (குட்ச் எக்ஸ்பிரஸ்) மற்றும் நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல, சிறந்த மலையாளப் படமாக தரூண் மூர்த்தி இயக்கிய சவுதி வெல்லக்கா படம் தேர்வானது.

ரசிகர்கள் கேள்வி

தேசிய விருது பட்டியலில் மலையாள உலகின் முன்னணி நடிகர் மம்முட்டியின் படம் இடம்பெறாதது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், கேள்வியையும் எழுப்பியது.

அதிர்ச்சி

இந்த நிலையில், தேசிய விருதுக்கு மம்முட்டியின் திரைப்படம் ஒன்று கூட பரிந்துரைக்கப்படவில்லை என்று தேர்வுக்குழுவின் தென்னிந்திய உறுப்பினரும், இயக்குநருமான எம்.பி., பத்மகுமார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரிந்துரைக்கப்படவில்லை

இது தொடர்பாக அவர் கூறியதாவது : 2022ம் ஆண்டு மக்களால் பாராட்டப்பட்ட லிஜோ ஜோஸ் இயக்கத்தில் மம்முட்டி நடித்த நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படம், தேசிய விருது பெற தகுதியான படமாகும். அந்த அளவுக்கு மம்முட்டியின் நடிப்பு அந்தப் படத்தில் இருந்தது. ஆனால், உண்மையை சொல்லப் போனால், இந்த ஆண்டு மம்முட்டியின் ஒரு படம் கூட தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்படவில்லை. உடனே அரசாங்கத்தை குறை சொல்லிவிடுவார்கள். ஆனால், இந்த முடிவை யார் எடுத்தது என்பதைத் தான் நாம் கேட்க வேண்டும்.

இழப்பு

விருது கிடைக்காமல் போனது மம்முட்டிக்கு மட்டுமல்ல, மலையாள சினிமாவுக்கும் தான் இழப்பு, எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Shankar
ஆக 18, 2024 20:47

மம்முட்டி அது என்னடா மம்முட்டி என்ற பேரு மலையாள பயலுகளுக்கு இவன விட்டா வேற எதையும் நடிக்க தெரியாது போல வேண்டுமென்றால் கால் கீப்பர் வேலைக்கு அனுப்புங்க தமிழ்நாட்டில் கடவுள் தேசத்திலிருந்து ஆட்கள் தேவைப்படுகிறது?????


Yasararafath
ஆக 18, 2024 15:58

பரிந்துரைக்கப்பட்ட படத்துக்கு மட்டும் தான் விருது.


ஆரூர் ரங்
ஆக 18, 2024 12:26

நாட்டில் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான படங்கள் வெளியாகின்றன. அனைத்தையும் தேர்வுக்குழு திரையிட்டு பார்த்து முடிவுக்கு வரமுடியாது. இதனால் பல ஆண்டுகளாகவே தயாரிப்பாளர் ஒவ்வொரு விருதுக்கும் ( கட்டணம் தலா 5000 என நினைகிறேன்) விண்ணப்பித்தால் மட்டுமே பரிசீலிக்கப்படும் என்பது முப்பதாண்டுகளுக்கு முன்பிருந்தே தொடரும் விதி. ஒத்துழைப்பு தராத நடிகர் அல்லது மற்ற கலைஞர்களைப் பழி வாங்குவதற்காக சில தயாரிப்பாளர்கள் விண்ணப்பிப்பதில்லை. சில விதிவிலக்கான தயாரிப்பாளர்களும் உண்டு. உதாரணமாக ஏக் துஜே கேலியே( ஹிந்தி) மொழி மாற்ற ரீமேக் படம் விருதுக்குத் தகுதியில்லை என்றாலும் தயாரிப்பாளர் திரு LV பிரசாத் சிறந்த பாடகர் விருதுக்கு விண்ணப்பித்து மறைந்த SPB அவர்களுக்கு வாங்கித் தந்தார்.


ramesh
ஆக 18, 2024 12:23

திருசிற்றம்பலம் படத்தின் நாயகிக்கு விருது கொடுக்கும் அளவுக்கு அந்த படத்தில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை .தனுஷ் நடித்த படம் என்பதால் கொடுக்க பட்டதா


Oviya Vijay
ஆக 18, 2024 11:55

"நண்பகல் நேரத்து மயக்கம்" படத்தை தியேட்டரில் நேரில் பார்த்த எனக்குத் தெரியும் அது எவ்வளவு குப்பையான படம் என்று... விமர்சனத்தில் ஆஹா ஓஹோ என்று இருந்ததால் தியேட்டரில் பார்க்க ஆசைப்பட்டு போயி நொந்து நூலாகி வெளியில் வந்தேன்... எந்த படமாக இருந்தாலும் அதில் நடக்கும் மர்ம சம்பவங்கள் ஏன் நடக்கிறது எதற்கு நடக்கிறது என்பதை கிளைமாக்ஸ்ஸிலாவது தெளிவாக விளக்க வேண்டும்... எதையும் சொல்லாமல் சப்பென்று கதையை முடிப்பார்களாம்... தலைவிதி என்று தலையில் அடித்துக் கொண்டு வெளியில் வந்தேன்... இதில் மம்முட்டி சிறப்பான நடிப்பு வெளிப்படுத்தினார் என்பதெல்லாம் வெறும் புருடா... வேண்டுமானால் படம் பாருங்கள்... நான் சொல்வது புரியும்...


vadivelu
ஆக 18, 2024 11:53

தயாரிப்பாளர்களுக்கு அரசு மீது வெறுப்பை அல்லது மம்முட்டி சார் மீது கோபமா? ஏன் விருதுக்கு விண்ணப்பிக்க வில்லை. இதிலும் அரசியலோ.


அப்புசாமி
ஆக 18, 2024 11:31

போறுண்டா... வாங்குன விருதுகள் போறாதா? புதியவர்கள் வரட்டும். வாங்கட்டும். ரிடையராகுற வழியைப் பாருங்க.


நிக்கோல்தாம்சன்
ஆக 18, 2024 11:20

ரொம்ப முக்கியம்


Sampath Kumar
ஆக 18, 2024 10:32

சனாதன சங்கிகளின் சொக்கி வேலையாக இருக்கும் பிருகு எப்படி மனு பர்க்கர் கதை தான் இங்கேயும்


Duruvesan
ஆக 18, 2024 13:25

மூர்கன் இங்கயும் மூர்க்க புத்தி காட்டாரான், மாதரச டிகிரி படிச்சா புத்தி இருக்காதோ? ரெஜிஸ்டர் பண்ணனும் முன்னாடியே


ஆரூர் ரங்
ஆக 18, 2024 10:26

படத்தின் தயாரிப்பாளர்தான் எந்தெந்தப் பிரிவு விருதுக்கு உகந்தது எனக் குறிப்பிட்டு கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மொழி மாற்ற ரீமேக் படங்களுக்கு விருது கிடைக்காது. ஆனால் அவற்றில் சிறந்த நடிகர், பாடகர் போன்ற பல இனங்களுக்கு கட்டணம் செலுத்தி தயாரிப்பாளர் விண்ணப்பிக்கலாம்.


பாமரன்
ஆக 18, 2024 11:14

ஓஹோ... எனக்கு மருவாதி குடுன்னு விண்ணப்பம் செஞ்சி வாங்கனுமோ... இவனுவ குடுக்கிற சில்லறை பணமுடிப்பை விட விண்ணப்ப செலவு மற்றும் ஃபார்மாலிடி அதேதான் அதிகமான்னும் சொல்வேளா ரங்கிடு..?


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி