உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேற்கு ஆசிய நிலவரம்: இஸ்ரேல் பிரதமருக்கு தொலை பேசியில் மோடி அறிவுரை

மேற்கு ஆசிய நிலவரம்: இஸ்ரேல் பிரதமருக்கு தொலை பேசியில் மோடி அறிவுரை

புதுடில்லி;: இஸ்ரேல் -காசா விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என இஸ்ரேல் பிரதமரிடம் தொலை பேசி வாயிலாக பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு, நேற்று தொலை பேசி வாயிலாக பிரதமர் மோடியிடம் பேசினார். அப்போது 78 சுதந்திர தின வாழ்த்துக்களை இஸ்ரேல் பிரதமர் தெரிவித்தார்.தொடர்ந்து மேற்காசியாவின் தற்போதைய நிலவரம் ,இஸ்ரேல் -காசா போர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு நாட்டு பிரதமர்களும் விவாதித்தனர்.இது குறித்து பிரதமர் மோடி கூறியதாவது, இஸ்ரேல் - காசா இடையே போர் பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தொடர வேண்டும், அனைத்து பிணை கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். இவ்வாறு மோடி வலியுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

RAMAKRISHNAN NATESAN
ஆக 17, 2024 10:38

தீய சக்தியை முழுவதுமாக ஒழிக்க வேண்டும் என்பது மகாபாரதத்தில் சொல்லப்பட்டுள்ள தத்துவம் .... அதை இஸ்ரேல் கடைபிடிக்கிறது ..... உள்ளூர் தேசவிரோதிகளையே களையெடுக்க முடியாத நமது சமாதானப்பிரியர் சொல்லி அவர் கேட்பாரா ????


Priyan Vadanad
ஆக 17, 2024 08:22

பக்கத்திலிருந்து அவர்கள் பேசிய விஷயங்களை கேட்டு செய்தி போட்ட மாதிரி தெரிகிறதே


RAMAKRISHNAN NATESAN
ஆக 17, 2024 10:40

அரசு தரும் செய்திகளைத்தான் வெளியிடுகிறார்கள் .... எது எப்படியோ இது முதலீடுகளை ஈஈஈஈர்ர்ர்ர்க்க போகிறேன் என்று சொல்லிவிட்டு ட்ரீட்மெண்ட் எடுத்து வந்த கதையில்லீங்கோ ....


அப்பாவி
ஆக 17, 2024 07:33

இது போருக்கான நேரம் இல்ல்சி. 40000 பேருக்கு மேல் செத்தாச்சு. தளவாடம் விக்க வேண்டிய நேரம்.


N.Purushothaman
ஆக 17, 2024 06:05

இந்த உலகம் பல போர்களை கண்டு உள்ளது ...அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வரவும் அப்பகுதி மக்களை முன்னேற்றவும் பல ஆண்டுகள் ஆகும் ...அதோடு நிலங்கள் முழுவதுவும் வெடி மருந்துகளால் பாதிப்பிற்கு உள்ளாவதால் விவசாயம் பாதிப்பு , நீர்மாசுபாடு போன்ற பல பிரச்சனைகள் உருவாகி சொர்க்கமாக இருந்த இடம் கூட நரகமாகி இடும் ... தற்போது நடக்கும் போரில் இரு தரப்பிலும் பல ஆயிரக்கணக்கான அப்பாவி பொது மக்கள் உயிர்கள் காவு கொடுக்கப்பட்டு உள்ளது ...இது தேவையா என்பதை இரு தரப்பும் உணர வேண்டும் ..


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை