உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரஸ் கட்சியினர் ஆட்சிக்கு வந்தால், ராம் ராம் என உச்சரித்தாலும் கைது செய்து விடுவர், என, பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்தார்.

காங்கிரஸ் கட்சியினர் ஆட்சிக்கு வந்தால், ராம் ராம் என உச்சரித்தாலும் கைது செய்து விடுவர், என, பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்தார்.

''காங்கிரஸ் கட்சியினர் ஆட்சிக்கு வந்தால், 'ராம் ராம்' என உச்சரித்தாலும் கைது செய்து விடுவர்,'' என, பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்தார்.மகேந்திரகர், ஹரியானாவில் முதல்வர் நாயப் சிங் சைனி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 10 லோக்சபா தொகுதிகளுக்கு நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்நிலையில், தேர்தல் பிரசாரம் செய்வதற்கான கடைசி நாளான நேற்று, மகேந்திரகர் மாவட்டத்தில் நடந்த பா.ஜ., பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:நான் உயிருடன் இருக்கும் வரை, தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது.

குடும்ப நலன்

இந்த தேர்தல், நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கானது மட்டுமல்ல; எதிர்காலத்தையும் தீர்மானிப்பதற்கானது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தவரை அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதிக்கவில்லை. வகுப்புவாதிகள், ஜாதி வெறியர்கள், வாரிசுகளே, இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ளனர். நாட்டு மக்களின் நலனுக்காக, காங்., - தி.மு.க., - திரிணமுல் காங்., - ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் ஒன்று சேரவில்லை. தங்களது குடும்பத்தின் நலனுக்காகவும், பணத்தை கொள்ளை அடிப்பதற்காகவும் கூட்டு சேர்ந்துள்ளனர்.தேர்தலில் இன்னும் வெற்றியே பெறவில்லை. அதற்குள், ஐந்து ஆண்டுகளில் ஐந்து பிரதமர்கள் இருக்க வேண்டும் என, இண்டியா கூட்டணி தலைவர்கள் பேசி வருகின்றனர். பசுவிடம் பால் கறப்பதற்கு முன்னரே, அக்கூட்டணியில் நெய்யை யார் எடுத்துக் கொள்வது என்பது தொடர்பாக சண்டை வெடித்துள்ளது.இந்த சுயநலவாதிகளா மக்களுக்கு நல்லது செய்யப் போகின்றனர்? கடந்த 10 ஆண்டுகளில், காங்., செய்த பாவங்களைக் கழுவ நாங்கள் கடுமையாக உழைத்துஉள்ளோம். அடுத்த ஐந்து ஆண்டுகள், நாட்டை மேலும் வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வோம். காங்கிரஸ் தலைமையிலான 'இண்டியா' கூட்டணி மதத்தின் பெயரில் மக்களை பிரித்தாளும் கூட்டணியாக உள்ளது. காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருக்கும்போது ராமர் கோவில் கட்டுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஓட்டு வங்கி

ஹரியானா மக்கள் எப்போதும், 'ராம் ராம்' என உச்சரிப்பவர்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ராமர் பெயரை உச்சரித்தாலும் கைது செய்து விடுவர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ராமர் கோவிலை பூட்ட விரும்புவதாக இளவரசரின் ஆலோசகர் கூறியுள்ளார். தங்கள் ஓட்டு வங்கி அரசியலுக்காக, இந்த நாட்டை பிரித்து, முஸ்லிம்களுக்கான இரண்டு நாடுகளை உருவாக்கியவர்கள் தான், இவர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

'பஞ்சாப் வளர்ச்சி அடையுமா?'

முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கும் பஞ்சாபில், 13 லோக்சபா தொகுதிகளுக்கு, ஜூன் 1ல் நடக்கும் ஏழாவது மற்றும் கடைசி கட்ட தேர்தலில் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. இங்குள்ள பாட்டியாலாவில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:பஞ்சாபில் போதைப்பொருள் அதிகரித்து வருவதால், பல்வேறு தொழிற்சாலைகள் வெளியேறி வருகின்றன. முதல்வர் பகவந்த் சிங் மான் காகிதத்தில் மட்டுமே முதல்வராக இருக்கிறார். இவர் பாதி நேரம் டில்லியில் தான் வலம் வருகிறார். இவர் எப்படி பஞ்சாபை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வார்?இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை