உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அடுக்குமாடியில் தீ 10 பேர் மீட்பு

அடுக்குமாடியில் தீ 10 பேர் மீட்பு

கிருத்திநகர்: மேற்கு டில்லியின் கிருத்தி நகரில் உள்ள ஒரு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 10 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.கிருத்தி நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதாக நேற்று காலை 8:40 மணியளவில் தீயணைப்புத் துறையினருக்கு புகார் அழைப்பு சென்றது. சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன.தீ விபத்து காரணமாக வீடுகளுக்குள் சிக்கிக் கொண்டிருந்த ஆறு பெண்கள் உட்பட 10 பேரை வெவ்வேறு தளங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.தீ விபத்தில் மின் சாதனங்கள், இரண்டு ஸ்கூட்டர்கள் சேதமடைந்தன. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறை அதிகாரி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ