| ADDED : ஜூன் 04, 2024 04:03 AM
பெங்களூரு, : ரிகள் மேம்பாட்டு பணிகளுக்கு கர்நாடக அரசு 100 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.தற்போது கர்நாடகாவில் பரவலாக மழை பெய்கிறது. மழைநீரை நல்ல முறையில் பயன்படுத்த, இயற்கை பேரிடர் நிர்வகிப்பு நிதியில் இருந்து, சிறிய நீர்ப்பாசன துறைக்கு 100 கோடி ரூபாய் வழங்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த நிதியை மத்திய அரசு நிர்ணயித்த விதிகளின்படி பயன்படுத்த வேண்டும். நிதியை பயன்படுத்துவதில், குளறுபடி நடந்தால் சிறிய நீர்ப்பாசனத் துறையின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் பொறுப்பாளி ஆக்கப்படுவர் என அரசு எச்சரித்துள்ளது.'மேம்படுத்தப்பட்ட ஏரி மற்றும் தொட்டிகளின் விபரங்களை உள்ளாட்சிகள் மாதாந்திர கூட்டத்தில் தாக்கல் செய்ய வேண்டும். ஒவ்வொரு பணிகள் துவங்கும் போதும் ஆய்வு செய்ய வேண்டும். விதிகளின்படியே பணிகள் நடத்த வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது.