உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒவ்வொரு மாதமும் 11 ரயில் விபத்துகள்: பா.ஜ., மீது காங்., குற்றச்சாட்டு

ஒவ்வொரு மாதமும் 11 ரயில் விபத்துகள்: பா.ஜ., மீது காங்., குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பா.ஜ., ஆட்சியில் சராசரியாக ஒரு மாதத்தில் 11க்கும் மேற்பட்ட ரயில் விபத்துகள் நடக்கிறது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.2014ம் ஆண்டுக்கு பிறகு நடந்த ரயில் விபத்துகள் குறித்து வீடியோ ஒன்றை எக்ஸ் சமூகவலைதளத்தில் காங்கிரஸ் பகிர்ந்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2014ம் ஆண்டுக்கு பிறகு, மோடி தலைமையிலான பா.ஜ., அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு, இந்தியாவில் சராசரியாக ஒரு மாதத்தில் 11க்கும் மேற்பட்ட ரயில் விபத்துகள் நடக்கிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=t04z0ex1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பா.ஜ., அரசின் மோசமான கொள்கைகளால் ரயில்வே பேரழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இந்த ரயில் விபத்துகளை தடுப்பதற்காக அரசு என்ன செய்கிறது?. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

venugopal s
ஜூன் 18, 2024 16:59

யாராவது நம் மீது உள்ள குறையை சொன்னால் ஏற்றுக் கொண்டு திருத்திக் கொள்ள வேண்டும். அந்த மனப்பான்மை பாஜகவில் யாருக்குமே கிடையாது, இல்லவே இல்லை என்று சாதிக்க மட்டுமே தெரிந்த விளங்காதவர்கள்!


K.Muthuraj
ஜூன் 18, 2024 14:48

கடந்த பத்தாண்டுகளில் இந்தியன் ரயில்வே மிகப்பிரமாண்ட வளர்ச்சி பெற்றுள்ளது. முன்பதிவில்லா பெட்டிகள் தரமானதாய் மாற்றப்பட்டுள்ளது. அனைத்து பெட்டிகளில் முற்றிலும் பயோ டாய்லெட் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இல்லையெனில் ரெயில் தண்டவாளம் எங்கிலும் மனித கழிவுகள் கொட்டிக்கிடக்கும். அதனை முற்றிலும் ஒழித்து விட்டார்கள். ஏராளமாய் புது ரயில்கள் மற்றும் ரயில்களின் வேகம் கூட்டப்பட்டுள்ளது. ரெயில் நிர்வாகம் ஊழல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆளில்லா லெவல் கிராஸ்ஸிங்குகளில் தரை மட்ட பாலங்கள் ஏராளமாய் அமைக்கப்பட்டுள்ளது. லெவல் கிராஸ்ஸிங்குகள் சாலை வாகனங்களின் காத்திருப்பு காலம் குறைந்து விட்டது. சிக்னல் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக ரயில் வந்து செல்லும் நேரமும் அட்டவணைப்படி சரியான நேரமாகவே இருக்கின்றது. தாமதம் என்பது சுமார் ஐந்து அல்லது பத்து நிமிடங்களே. முன்பெல்லாம் ரயில் பெட்டி தடம் புரளுதல் என்பது தினசரி நிகழ்வாகவே செய்தித்தாள்களில் இருக்கும். இப்பொழுது அது முற்றிலும் குறைந்து விட்டது. தரமான பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் எண்ணிக்கை உயர்ந்து விட்டது. ஒவ்வொரு ரயில் நிலையமும் அடிப்படை வசதிகள் உயர்த்தப்பட்டுள்ளது. ஓரளவு சுத்தமாக நிர்வகிக்கப்படுகின்றது. இதற்கு மேல் வேறென்ன வேண்டும்???


Saai Sundharamurthy AVK
ஜூன் 18, 2024 12:28

ஒவ்வொரு மாதமும் 11 என்றால் என்ன அர்த்தம் ? அநேகமாக காங்கிரஸ் மீது தான் சந்தேகம் வருகிறது.


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 18, 2024 12:21

தவறுகள் நடந்தால் அந்தந்த துறையின் அமைச்சர்கள் பொறுப் பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் ..... இது மத்திய அரசுக்கு மட்டுமே பொருந்தும் .......... திராவிடியா மாடல் ஓலம் ........


Vathsan
ஜூன் 18, 2024 15:07

அமைச்சர்கள் முன் மாதிரியாக ராஜினாமா செய்யலாமே.


Ramesh Sargam
ஜூன் 18, 2024 12:10

கடந்த சிலவருடங்களாக ரயில் விபத்துக்கள் மிக மிக குறைவாக இருந்தது. திடீரென்று விபத்துக்கள் அதிகம் ஆகின்றன. காரணம் என்னவாக இருக்கும்? எதிர்க்கட்சியினர் சதியோ என்று நான் நினைக்கிறேன்.


Sridhar
ஜூன் 18, 2024 11:49

இந்த செய்தியின் உண்மைத்தன்மையை கண்டறியவேண்டும். பொய் எனும் பட்சத்தில், இதை பரப்ப முயன்ற புரட்டு வாத கட்சி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் இவர்கள் ஆட்சியில் எவ்வளவு விபத்துக்கள் நடந்தன, இப்போது 2014 க்கு பிறகு எவ்வளவு என்ற விவரங்களையும் வெளிக்கொணர வேண்டும். திருட்டு கட்சிகளின் கேவல பிரச்சாரங்களை உடனுக்குடனே முறியடிக்காவிட்டால், திருடன் நல்லவன் போல காட்சியளிப்பான்


Sampath Kumar
ஜூன் 18, 2024 11:38

ராமர் ராஜ்யத்தில் இதெல்லாம் சாதாரணம் அப்பு


வாய்மையே வெல்லும்
ஜூன் 18, 2024 12:04

திருடனுக்கு தேள் கொட்டினார் போல உள்ளது உம்முடைய பதில்.. திருட்டு திராவிடன் புத்தி இப்படித்தான் வேலைசெய்யும்


Bala
ஜூன் 18, 2024 12:26

நீ கூறியதற்கு பேர்தான் திராவிட புரட்டு, ராமசாமி உருட்டு


RAJ
ஜூன் 18, 2024 11:36

கரெக்ட்.


R SRINIVASAN
ஜூன் 18, 2024 11:21

தகுதி ,திறமை அடிப்படையில் ஆட்களை நியமிக்கவில்லை என்றால் இதுதான் நடக்கும். 1964-ல் அரியலூர் ரயில் விபத்து நடந்து அதில் 60-க்கும் மேற்பட்டோர் இறந்தது உங்கள் காங்கிரஸ் ஆட்சியில்தான் .60 ஆண்டுக்காலம் ஆட்சி செய்து நாட்டைக் கெடுத்தது போதும் .ஒன்றும் தெரியாத பப்புவை ஆட்சியில் அமர்த்தி நாட்டை கொள்ளையடிக்க பார்க்கிறார்கள் ராபர்ட் வதேரா நில அபகரிப்பு, நேஷனல் ஹெரால்ட் கொள்ளை இதற்கெல்லாம் பதில் சொல்லிவிட்டு அதன் பின் மோடியை குறை சொல்லுங்கள்.


K.n. Dhasarathan
ஜூன் 18, 2024 11:14

உலக சாதனை என்று நடத்துவதற்கு திட்டமோ? ரயில்வே அமைச்சரும், பிரதமரும்தான் பதில் சொல்லவேண்டும் குறைந்தது உயிர்கள் இழப்பிற்கு என்னதான் பதில் ?


s sambath kumar
ஜூன் 18, 2024 11:40

சிக்னல் violate பண்ணினா அதுக்கு பிரதமர் என்ன பண்ணுவார்? தவறு train டிரைவர் மேல.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி