உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மெட்ரோ ரயில் பயணியருக்காக விரைவில் 1,100 மின் ஆட்டோக்கள்

மெட்ரோ ரயில் பயணியருக்காக விரைவில் 1,100 மின் ஆட்டோக்கள்

பகர்கஞ்ச்:மெட்ரோ ரயில் பயணியரின் வசதிக்காக 1,100 மின்சார ஆட்டோக்களை அறிமுகப்படுத்த, டி.எம்.ஆர்.சி., எனும் டில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் திட்டமிட்டுள்ளது.டி.எம்.ஆர்.சி.,யின் எதிர்காலத் திட்டம் குறித்து அதன் நிர்வாக இயக்குனர் விகாஸ் குமார் நேற்று கூறியதாவது:மெட்ரோ ரயில் பயணத்தை ஊக்குவிப்பதற்காக, மெட்ரோ ரயில் நிலையங்களை இணைப்பு ஏற்படுத்தும் வகையில் பேருந்துகளை மாநில அரசு இயக்குவது வரவேற்கத்தக்கது.மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து, பயணியர் விரும்பும் இடத்திற்குச் செல்வதற்காக மின் ஆட்டோக்களை இயக்க டி.எம்.ஆர்.சி., முடிவெடுத்தது.கடைசி மைல் எனும் இணைப்பை ஏற்படுத்த 2,299 மின் ஆட்டோக்களை இயக்க டி.எம்.ஆர்.சி.,க்கு போக்குவரத்துத் துறை அனுமதி அளித்துள்ளது. இவற்றில் 1,636 பொதுப்பிரிவிலும் 663 மின் ஆட்டோக்கள் பெண்கள் இயக்கவும் அனுமதி அளிக்கப்படும்.அந்த வகையில், மின் ஆட்டோக்களை இயக்க இதுவரை 326 பெண்களுக்கும் 857 பொதுப்பிரிவிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டோக்களுக்காக 40 டி.எம்.ஆர்.சி., ரயில் நிலையங்களில் சார்ஜிங் பாயின்ட்களும் பார்க்கிங் பகுதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.வரும் ஆகஸ்ட் இறுதிக்குள் மேலும் 1,116 மின்சார ஆட்டோக்களை இயக்க முன்வருவர் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி