உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளாவில் 14 பேர் வேட்பு மனு தாக்கல்

கேரளாவில் 14 பேர் வேட்பு மனு தாக்கல்

மூணாறு:கேரளாவில் லோக்சபா தேர்தல் வேட்பு மனு தாக்கல்துவங்கியது. 14 பேர் மனுக்களை தாக்கல் செய்தனர்.கேரளாவில் 20 தொகுதிகளிலும் லோக்சபா தேர்தல் ஒரே கட்டமாக ஏப்.26ல் நடக்கிறது. வேட்பு மனு தாக்கல் நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று 14 பேர் 18 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.திருவனந்தபுரம் 4, கொல்லம் 3, காசர்கோடு 2, மாவேலிக்கரை, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு தொகுதிகளில் தலா ஒன்று வீதம் மனு தாக்கல் நடந்தது. கொல்லம், கோழிக்கோடு தொகுதிகளில் ஒருவர் தலா இரண்டும், காசர்கோடு தொகுதியில் ஒருவர் மூன்று மனுக்களை தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்கள் தாக்கல் செய்த ஏப்.4 இறுதி நாள். ஏப்.5ல் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, ஏப். 8வரை வாபஸ் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்