உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்: 22 பேர் பலி

காஷ்மீரில் பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்: 22 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜம்மு: காஷ்மீரில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.காஷ்மீர் மாநிலம் ஜம்மு அருகே உள்ள அக்னூர் பகுதியில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதில் 22 பேர் உயிரிழந்த நிலையில், 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது: பஸ் விபத்தில் 22 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவிற்கு வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இவ்வாறு ஜனாதிபதி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Vathsan
மே 30, 2024 19:18

ஐயோ பாவம். சாமி கும்பிட சென்றவர்களுக்கு நடந்த சோகம். அவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும்.


கான்
மே 30, 2024 19:10

ஜீ இரங்கல் இன்னும் மூணு நாள்.கழிச்சுதான்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி