உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மைசூரு தசரா ஊர்திகள் விண்ணப்பிக்க 15 கடைசி

மைசூரு தசரா ஊர்திகள் விண்ணப்பிக்க 15 கடைசி

மைசூரு : மைசூரு தசரா நிறைவு நாளில் ஜம்பு சவாரி நடக்கும். அப்போது தசரா யானைகளுக்கு பின்னால், பல்வேறு மாவட்டங்கள், அமைப்புகள் சார்பில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடக்கும்.நடப்பாண்டு நடக்கும் தசரா விழாவில் பங்கேற்க விரும்பும் மாவட்டங்கள், மத்திய, மாநில அரசு துறைகள், தனியார் மையங்கள் சார்பில் அலங்கார ஊர்தி பங்கேற்க தசரா அணிவகுப்பு துணை கமிட்டி அழைப்பு விடுத்துள்ளது. இதில் பங்கேற்போர், அவரவர் மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க சம்பந்தமான வடிவமைப்பு, பழமை வாய்ந்த கோவில், கோபுரங்கள், மத்திய, மாநில அரசுகளின் மக்கள் நல திட்டங்கள் இருக்கும் காட்சிகள் போன்ற பல்வேறு அலங்கார அணி வகுப்புகளை பங்கேற்கலாம்.சிறந்த அலங்கார ஊர்திக்கு, ரொக்க பரிசு வழங்கப்படும். நடப்பாண்டு தசராவை, ஆடம்பரமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும் அணிவகுப்பு அலங்கார ஊர்திகள், மக்களின் வாழ்க்கை, முன்னேற்றத்துக்கு வழிகாட்டுதலாக இருக்க வேண்டும்.இம்மாதம் 15ம் தேதிக்குள் விண்ணப்பங்களை செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு அலங்கார ஊர்தி துணை கமிட்டி அதிகாரி சேத்தன் குமாரின் 82965 36692, 97384 05358 ஆகிய மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி